பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

256

இராமன் மனம் மாறி, சுக்ரீவனை பாராட்டியபோது, சூரியன் அஸ்தமித்தான். இதை கவி எவ்வாறு சித்தரிக்கிறார்?

***


தன் தனிப் புதல்வன் வென்றித்
        தசமுகன் முடியில் தந்த
மின் தளிர்த்து அனைய பல் மா
        மனியினை வெளியில் கண்டான்
“ஒன்று ஒழித்து ஒன்று ஆம்” என்று.
        அவ் வரக்கனுக்கு ஒளிப்பான் போல
வன் தனிக் குன்றுக்கு அப்பால்
        இரவியும் மறையப் போனான்.

தன் புதல்வனான சுக்ரீவன் இராவணனுக்கு வெட்கம் உண்டாகுமபடி செய்துவிட்டான். இராவணனின் மகுடங்களை குறை செய்திட்டான். சுக்ரீவனோ சூரியனின் புதல்வன். தன் மைந்தன் (சுக்ரீவன்) செய்த செயலுக்கு, தன் மீது பழிவாங்குவானோ என்று அஞ்சியதுபோல் கதிரோன் அத்தகிரிக்கு அப்பால் மறைந்தான்.

***

தன் தனி புதல்வன் - தன்னுடைய ஒப்பற்ற மகன்; வென்றி தசமுகன் முடியில் தைத்த - வெற்றி பொருந்திய இராவணனுடைய மகுடங்களிலே பதிக்கப்பெற்றிருந்த; மின் தளிர்த்தனைய - மின்னல் கொழுந்து விட்டாற் போன்ற; பல் மா மணியினை - பல சிறந்த மணிகளை; வெளியில் கண்டான். வெளிப்படுத்தி நின்றான்; (அதனால்) 'ஒன்று ஒழித்து ஒன்றாம் - ஒன்று அழிய ஒன்று பொருந்தும்; என்று - என்று பயந்து; அவ்வரக்கனுக்கு ஒளிப்பான் போல - அந்த இராவணனுக்குப் பயந்து ஒளிபவன் போன்று; வல் தனி குன்றுக்கு அப்பால் - வலிய தனிப்பட்ட மலைக்கு