பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

268

அரசை உனக்கே தந்துவிட்டேன்; ஊழிக் காலம் - ஊழிக் காலம்வரை; பொன் அரி சுமந்த பீடத்து - பொன்னால் செய்யப்பட்ட சிங்காதனத்தில்; இமையவர் போற்றி செய்ய - வானவர் துதிக்க; மன்னவனாக ஆளுதி - ஆட்சி புரிவாயாக; மகுடம் யானே சூட்டுவன் - நானே உனக்கு மணிமுடி சூட்டுவேன்; என்றான் -

***

அங்கதன் அதனைக் கேளா,
        அங்கையோடு அங்கைத் தாக்கித்
துங்கவன் தோளும் மார்பும்
        இலங்கையும் துளங்க, நக்கான்;
‘இங்கு நின்றார்கட்கு எல்லாம்
        இறுதியே’ என்பது உன்னி,
உங்கள் பால் நின்று எம்பால்
        போந்தனன் உம்பி’ என்றான்.

அங்கதன் அதனைக் கேட்டுக் கைகொட்டிச் சிரித்தான். எப்படி? தன்னுடைய உயர்ந்த வலிய தோள்களும் மார்பும், இலங்கையும் குலுங்கும்படி உரக்கச் சிரித்தான். சிரித்துச் சொல்கிறான்:“இங்கு உள்ளவர்களுக்கெல்லாம் அழிவு காலம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து உனது தம்பி யாகிய விபீடணன், உன்னைவிட்டு நீங்கி எங்களுடன் சேர்ந்துவிட்டான்” என்றான்.

***

அங்கதன் அதனைக் கேளா - அங்கதன் அதனைக் கேட்டு; அங்கையோடு அங்கை தாக்கி கைதட்டி ஆரவாரம் செய்து; துங்க வன் தோளும் . உயர்ந்த வலிய தோள்களும்; மார்பும் . இலங்கையும் . இலங்காபுரியும்; துளங்க. குலுங்க, நக்கான் - சிரித்தான்: இங்கு நின்றார்கட்கு எல்லாம் இறுதியே - இங்குள்ளோர்க்கெல்லாம் அழிவு