பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

271

அவனை நோக்கி; தேவியை விடுக அன்றேல் செருக்களத்து எதிர்த்துத் தன் ஆவியை விடுக - சீதையைவிடு. இல்லையேல் போர்க்களத்திலே நேர் நின்று போர் செய்து உயிர் விடுக; என்றான்.

***

இதைக் கேட்டு கடுங்கோபங் கொண்டான் இலங்கேசன், அங்கதனை பற்ற நால்வரை கட்டளையிட்டான். நால்வர் அவனைப் பற்றினர். ஆனால் அங்கதன் அவர்கள் தலையை துண்டித்து தண்டித்தான்.

சுற்றிலுமிருந்த வீரரை ஒருமுறை பார்த்தான் இராமதூதன்.

“இராமனின் அம்புகள் வந்து வீழ்வதற்கு முன்னரே வலிமையற்ற நீங்கள் எல்லோரும் உங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிப் போய்விடுங்கள்!” என்று கூறிக் கொண்டே வானத்தில் எழுந்தான்.

இராமனிடம் வந்தான். அவன் காலடியில் விழுந்து வணங்கினான். பகைவரோடு பொருததால் இரத்தம் படிந்திருந்த அவன் கால்களை அண்ணலும் கண்டான்.

***


உற்றபோது அவன்
        உள்ளக் கருத்து எலாம்
கொற்ற வீரன் உணர்த்து
        என்று கூறலும்
முற்ற ஓதி என்?
        மூர்க்கன் முடித்தலை
அற்ற போது அன்றி
        ஆசை அறான் என்றான்.