பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

276

தாரணி மௌலி பத்தும்
        சங்கரன் கொடுத்த வாளும்
வீரமும் களத்தே போக்கி
        வெறுங்கையோடு இலங்கை புக்கான்.

முதல் நாள் போரில் எல்லாம் இழந்து, இராமனின் கருணையால் வீடு திரும்பிய இராவணன் தன்னிலை எண்ணி மனங்குன்றினான்.

திக்கஜங்களை எதிர்த்து வெற்றிக் கண்ட தனக்கா இந்த அவல நிலை?

கைலாய மலையை பெயர்த்தெடுத்த தனக்கா இந்த இழிநிலை என மருகினான்.

இசை வல்லுனன் ஆகிய நாரதனே மகிழும்படி சாமவேதம் பாடிய எனக்கா (இலங்காதிபதியான எனக்கா)இந்நிலை?

***

வாரணம் பொருத மார்பும் - திசை யானைகளுடன் (நேர் நின்று) போர் புரிந்த மார்பும்; வரையினை எடுத்த தோளும் - கயிலாய மலையினை அகழ்ந்து எடுத்த புயமும்; ஆரண முனிவர்க்கு ஏற்ப - வேதங்களில் வல்ல முனிவர்களும் உவந்து ஏற்றுக்கொள்ளுமாறு; அருமறை பயின்ற நாவும் - அருமையான சாம கானம் பயின்ற நாவும்; தாரணி மவுலி பத்தும் - மாலை புனைந்து நின்ற பத்து மகுடங்களும்; சங்கரன் கொடுத்த வாளும் - சிவபெருமான் அளித்த சந்திரகாசம் என்ற வாளும்; வீரமும் - தன்னுடைய வீரப்பான்மையும் (என்ற அனைத்தையும்); களத்தே விட்டு - போர்க் களத்திலேயே போட்டு விட்டு; வெறுங்கையே