பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

இந்திரி முதல் - கிழக்கு முதலாகிய; திசை எட்டும் -எட்டுத் திசைகளிலும்; கேட்டன - கேட்டன;

மணிமுடிச் சிகரம் தீண்ட - அவன் ஆர்ப்பரித்து எழுந்த போது இரத்தின கிரீடம் அணிந்த சிரசாகிய மலைச் சிகரம் பட்டதால், சந்திரன் முதலிய தாரகைக் குழாம் - சந்திரனை முதலாக உடைய நட்சத்திரக் கூட்டங்கள்; சிந்தின -கீழே உதிர்ந்தன.


***

கடித்த வாய் எயிறு உகு
        கனல்கள் கார் வீசும்பு
இடித்தலால் உகும் உரும்
        இனத்தில் சிந்தின;
தடித்து வீழ்ந்தன எனத்
        தகர்ந்து சிந்தின
வடித்த தோள் வலயத்தின்
        வயங்கு காசு அரோ.

கோபத்தினாலே பற்களை நறநற என்று கடித்தான் வாலி. அப்போது பற்களினின்றும் சிந்திய தீப்பொறிகள் எப்படியிருந்தன? வானத்திலே இடி இடிக்கும்போது சிதறி ஓடும் சிறு மேகக் கூட்டங்கள் போல் இருந்தன. அவன் தோள் தட்டி முழங்கியபோது அவனுடைய தோள் வளைகளிலிருந்து சிந்திய ரத்தினங்கள் மின்னல் சிதறுவன போல் விளங்கின

***


கடித்த வாய் எயிறு உகு - (கோபத்தினாலே வாலி) கடித்த வாயில் உள்ள பற்களினின்றும் சிந்திய, கனல்கள் - இப்பொறிகள்; கார் விசும்பு இடித்தலால் வானத்திலே மேகங்கள் இடிமுழக்கம் செய்வதால், உகும் - சிதறும்; உரும் சினத்தில் சிந்தின - மேகக் கூட்டங்கள்போல் சிதறி விழுந்தன. (அவன் தோள் தட்டி முழங்கியபோது) வடித்த -