பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

300



அந்த அம்பு அழுந்திய மார்பைக் கண்ணீராற்றுவான்; மார்பில் அணைத்துக்கொள்வான். அர்க்கர்கோன். வாய் விட்டுக் கதறும் இந்த இராவணனின் துயருக்கு உவமைக்கூற இயலுமோ? இயலாது.

***

அம்பு - அம்புகளின்; மாரி - மழை போன்ற மிகுதி; அழுந்திய மார்பை - ஊன்றிய (இந்திரசித்தின்) மார்பை; அழுது - (மகன் இறந்ததால்) அழுது; தன் - (இராவணன்) தன்னுடைய, அப்பு மாரி இழ் யாக்கையின் - (கண்) நீர் மழை சொரிந்து வழிகின்ற உடலில்; அப்பும் - அப்புக் கொள்வான்; மாரின் - தன் மார்பிலே; அணைக்கும் - அணைத்துக் கொள்வான்; அரற்றும் - புலம்புவான்; அ பு மான் - (இராவணனாகிய) அப்பெரியோன்; உற்றது - அப்பொழுது பட்டதை; யாவர் உற்றார் - வேறு எவர் அடைந்தார்! (எவரும் இல்லை என்றபடி)

அப்பு - (முதலடியில்) மாரி,
அப்பு மாரி - (இரண்டாவது அடி) (கண்) நீர் மழை
அப்பும் (மூன்றாம் அடி) மார்பின்
அப் புமான் - புருடன்.

***

இலங்கையே சோகத்தில் ஆழ்கிறது. இலங்கேசன் தன் மகனுடைய உடலை எண்ணெய்த் தோணியிலிட செய்தாலும், அது அவன் சோகத்திற்கு மாற்றாகுமா?

“இத்தனை அவலத்திற்கும் காரணம் யார்? சீதை தானே! அவளை வெட்டுங்கள்!” என்ற இராவணனின் கட்டளை எதை காட்டுகிறது? அறிவையும் மனத்தையும் இழிவுபடுத்திய காமத்தை, மைந்தன் மேல் அரக்கன் கொண்ட பாசம் வென்றதை! ஆனால், சீதையை வெட்டி விட்டால், இந்திரசித்து உயிர் பெற மாட்டானே! என்ற உண்மை இராவணனின் வஞ்சம் தீர்க்கும் எண்ணத்தை