பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306


தேருக்குப் பூசை செய்தான். தானங்கள் கொடுத்தான். போருக்குக் கிளம்பும்முன் இராவணன் கூறினான் : “இன்றைய போரில் ஒன்று இராமனை மாள்வித்தல்; அன்றித் தான் அவனால் மாள்தல்; இவ்விரண்டுமின்றி தோல்வியோடு திரும்புதல் இன்று.”

***


ஏறினான் தொழுது; இந்திரன் முதலிய
        இமையோர்
தேறினார்களும் தியங்கினார்;
        மயங்கினார், திகைத்தார்;
வேறு நாம் செயும் வினை இலை,
        மெய்யின் ஐம் புலனும்
ஆறினார்களும் அஞ்சினர், உலகு
        எலாம் அனுங்க.

இராவணன் அத் தேரை தொழுதான். அதன்மீது ஏறினான். அது போது; முதலில் தேவர்கள் அச்சமுற்றாலும், பின்னர் அரக்கரை அழிக்கவே இராமன் பிறந்து உள்ளான் என்ற உண்மை நினைவுக்கு வந்தவுடன் தெளிந்தனர். ஐம்புலன்களை அடக்கிய முனிவரும் தேரேறிய இராவணனைக் கண்டு அஞ்சினர்; தம்மால் செய்யக்கூடிய காரியம் எதுவுமில்லையே என்று ஏங்கி அஞ்சினர்.

***

(இவ்வாறு சபதம் கூறி) பொழுது - தேரினை வணங்கி; ஏறினான் - அதன்மீது ஏறினான்; தேறினார்களும் -(முன்பு அச்சத்தினின்று) மனம் தேறினவர்களாக இருந்தும்; இந்திரன் முதலிய இமையோர் - இந்திரன் முதலிய தேவர்கள்; தியங்கினார்-சோர்ந்தனராயினர்; மயங்கினார்-(அச்சத்தால்) மனமயக்கம் அடைந்தார்கள்; திகைத்தார் -