பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

312

குறிப்பினை நோக்கி; செய்தி - உன் செயல்களைச் செய்வாயாக; துடிப்பு இலை - விரைய வேண்டா; என்ன சொன்னான் - என்று கூறினான்.

***

இங்கே, எவ்வளவு துன்பம் வந்தாலும் பொறுமையே உருவாக உள்ள இராமனை படம் பிடித்துக் காட்டுகிறான் கவி சக்கரவர்த்தி.

மாதலி உடன்படுகிறான். போர் வீரனான மகோதரன், தன் தலைவன் இராவணன் இராமனுடன் போராடும்போது வாளா நிற்றலை விரும்பாது, அரக்கன் உத்தரவிட்டபடி லட்சுமணனுடன் பொருவதாகச் சொல்கிறான். ஆனால் இராமன்மீதே தேரை விடுமாறு சாரதியைக் கட்டளையிடுகிறான்.

***


அசனி ஏறு இருந்த கொற்றக்
        கொடியின் மேல், அரவத்தேர் மேல்
குசை உறு பாகன் தன் மேல்
        கொற்றவன் குவவுத்தோள் மேல்,
விசை உறு பகழி மாரி வித்தினான்;
        விண்ணினோடும்
திசைகளும் கிழிய ஆர்த்தான்;
        தீர்த்தனும், முறுவல் செய்தான்,

மகோதரன் இந்திரனிடமிருந்து வந்த தேரின் மீது அம்பு மாரி பொழிந்தான். ஏன், அது வெற்றிப் பொருந்தியது; தெய்வீகமானது; எனவே அதை அழிக்கவேண்டும் என்ற உறுதிக்கொண்டு தாக்கினான். தேரின் மீது இருந்த தேர்ப்பாகன் மாதலிமீதும் அம்புக் கணைகளை விடுத்தான். அத்துடனா? வெற்றி வீரனான இராமனின் தோளின் மீதும்