பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

320


இராவணன் தேருடன் வானத்து எழுந்தான். இராமனும் தன் தேரை மேலெழச் செய்தான்.

இருவருக்கும் விற்போர் நடந்தது. இராமன் சரங்கள் விட, அவற்றிற்கெதிராக தன் இருபது கைகளாலும் பலவகை படைகளை வாரி அவன் மீது வீசினான்.

***


உடைக்கடல் ஏழினும்,
        உலகம் ஏழினும்,
இடைப் படு தீவினும், மலை
        ஓர் ஏழினும்,
அடைக்கலப் பொருள் என
        அரக்கன் வீசிய
படைக்கலம், மழை படு
        துளியின் பான்மைய.

இராமன் அரக்கன் படைக்கலங்களைத் தடுத்தான்.எப்படி? தன்னவர் மீது அரக்கர் வீசிய படைக்கலங்களின் மழை,சேதம் விளைவிக்காமல்,சிறு மழைத்துளிகள் போல மாறும்படியாக தன் வில்லால் அழிவுப் போக்கையே மாற்றினான்.

***

(இவ்வாறு இரு தேர்களும் சூழ்ந்து வரும்), உடை கடல் ஏழினும் உலகம் ஏழினும் - ஏழு கடல்களிலும்;(அவற்றை) உடையாகக் கொண்டு ஏழு பூமிகளிலும்; இடைப்படு தீவினும் - அவற்றிற்கு இடையே உள்ள தீவுகளிலும்; மலை ஓர் ஏழினும் - ஏழு மலைகளிலும்; அடைக்கலம் பொருள் என - (இராவணன் தன்) பாதுகாவலுக்காக வைத்திருந்த பொருள்கள் என்னும்படி; அரக்கன் வீசிய - அவ்வரக்கன் (இராமபிரான் மீது) வீசியனவுமான; படைக்கலம் – படைக்-