பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

323


அம்புகளை இராவணன் எய்தான்; மிக மிக வேகமாக ஒரே நொடியில் எய்தான். அவை எத்தகையன? கடல் நீரை குடித்து, வற்றிடச் செய்யும் திறன் உடையன; மிகவும் வேகமாக காற்றையே ஈர்த்துக் கொண்டுச் செல்லும் வலிமை யுடையன. உலகையே கடந்துச் செல்லக்கூடிய அந்த அம்புகள் இடைவெளியின்றி பறந்தன.

***

கூற்றுக் கோடினும் யமன் தன்னுடைய கொல்லுதல் தொழிலினின்று வழுவினும்; கோடல - பிறழாதனவும்; கடல் எலாம் குடிப்ப - கடல் நீர் அடங்கலும் பருகுவனவும்; மேருவை - மேரு மலையை நீறு குப்பையின் நூறுவ புழுதித் தொகுதி போல ஆகுமாறு பொடி செய்வனவும்; நெடிய - நீண்டனவும்; காற்று பின் செல - விரைவில் காற்றும் தமக்குப் பின்னிட; செல்வன - செல்வனவும்; உலகெலாம் கடப்ப - உலகெல்லாம் தாண்டுவனவும் ஆன; நூறு கோடி அம்பு நூறு கோடி அம்புகளை இராவணன் நொடியில் எய்தனன் - இராவணன் ஓர் கைந் நொடிப் போதில் விடுத்தான்.

***

இருப்புக் கம்மியற்கு இழை
        நுழை ஊசி என்று இயற்றி
 விருப்பின், “கோடியால் விலைக்கு”
        எனும் பதடியின்-விட்டான்,
கருப்புக் கார் மழை வண்ண!—
        அக் கடுந் திசைக் களிற்றின்
மருப்புக் கல்லிய தோளவன்
        மீள அரு மாயம்.

மாயா அத்திரம் விட்டான் இராவணன். இறந்த படைக்கலங்கள் எல்லாம் உயிரோடு எதிரிப்பது போன்ற ஒரு