பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

325




சங்காரத்தான் கண்டை ஒலிப்ப,
        தழல் சிந்த,
பொங்கு ஆரத்தான் மார்பு
        எதிர் ஓடி புகலோடும்,
வெங் காரத்தான் முற்றும்
        முனிந்தான்; வெகுளிப்பேர்
உங்காரத்தால் உக்கது, பல்
        நூறு உதிர் ஆகி.

எதிர்படும் பொருளை எல்லாம் ஒழிக்கக் கருதி சூலப் படையை இராமன் மீது ஏவினான் இலங்கை வேந்தன். இது கண்டு தேவர்கள் நடுங்கினர். இச் சூலத்தை வெல்வாய் என்று இராமனை வேண்ட, இராமன் அதை தன் உங்காரத்தினால் அழித்தான்.

***

(அந்த சூலம்), சங்காரத்தால் - அழிக்கும் தொழிலுடன் கண்டை ஒலிப்ப. மணிகள் சத்திக்கவும்; தழல் சிந்த . நெருப்புச் சிதறவும்; பொங்கு காரத்தான் - பொங்குகின்ற சினத்தினையுடைய (இராமபிரானுடைய) மார்பு எதிர் ஓடி - மார்புக்கு நேராக விரைந்து சென்று; புகலோடும் - நுழைந்த அளவில்; வெம் காரி ஒத்தான் முற்றும் முனிந்தான் - கொடிய மேகத்தை யொத்தான் மிகவும் சினந்தான்; வெகுளி - (அவனுடைய) சினத்தினால் எழுந்த; பேர் உங்காரத்தால் - பெரிய உங்கார ஒலியால்; (அந்தச் சூலம்) பல் நூறு உதிர் ஆகி - பல நூறு தூள்களாகி; உக்கது - சிதறியது.

***

சூலம் அழிந்ததை கண்கூடாகப் பார்த்தவுடன் அரக்கன் இராமனை வியப்புடன் பார்த்தான். இவன்