பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

326

ஒருவேளை “வேத முதல்வனோ?” என இராவணன் கருதினான்.

***

“வென்றான்,” என்றே உள்ளம்
        வியந்தான், ‘விடுசூலம்
பொன்றான் என்னின் போகலது’
       என்னும் பொருள் கொண்டான்
ஒன்று ஆம் உங்காரத்திடை
        உக்கு, ஓடுதல் காணா
நின்றான், அந் நாள் வீடணனார்
        சொல் நினைவுற்றான்.

இராவணன் விட்ட சூலம் எத்தகையது? அவன் பகைவனான இராமன் இறந்தாலன்றி போகக் கூடியது அன்று. அவ்வாறிருக்க, ஓர் உங்காரத்தினால் அச் சூலத்தை பொடிப் பொடியாக உதிர்த்த இந்த இராமன், விபீடணன் சொன்னது போல் மும்மூர்த்திகளை விடச் சிறந்த பரம்பொருளோ? என்று வியந்தான்.

***

விடு சூலம் - நாம் எறிந்த குலப்படை, பொன்றான் என்னில் போகலது - (இராமன்) இறந்தாலன்றி (அவனை விட்டு) அப்புறம் செல்லாது; என்னும் பொருள் - என்கின்ற கோட்பாட்டை; கொண்டான் - மனத்திற் கொண்டவன் ஆன இராவணன்; ஒன்று ஆம் ஒப்பற்றதான; உங்காரத் இடை - (இராமனது) உங்காரத்தினால்; உக்கு ஓடுதல் - (அந்தப் படை) சிதறி ஓடுதலை; காணா நின்றான் - கண்டு நின்றவனாகி; வென்றான் - இவன் நம்மை வெல்பவனே ஆவன; என்றே - என்று கருதி, உள்ளம் - மனதில் எழுத்த (அச்சத்தால்); வெயர்த்தான் - வெயர்த்தான்; அந்நாள் –