பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ஏற்ற - தன் தந்தையினுடைய; பேர் உலகெலாம் - பெரிய உலக அரசு அனைத்தையும்; எய்தி -அவன் அளிக்க தான் பெற்ற (பின்); ஈன்றவள் -தன்னைப் பெற்ற தாயாகிய கோசலைக்கு: மாற்றவள் -மாற்றாளாகிய கைகேயி: ஏவ - கட்டளையிட, மற்று - மற்றும்; அவள் தன் மைந்தனுக்கு - அவளது மகனாகிய பரதனுக்கு ஆற்று அரும் உவகையால் -செயற்கரிய மன மகிழ்வோடு; அளித்த ஐயனை - கொடுத்த புண்ணியனை; போற்றலை - நீ பாராட்டினாய் அல்லை; இன்னை - இத்தகைய பழிச் சொற்கள்: புகலல் பாலையோ - கூறலாமோ?


***

நின்ற பேர் உலகெலாம்
        நெருங்கி நேரினும்
வென்றி வெம் சிலை அலால்
        பிறிதும் வேண்டுமோ?
தன் துணை ஒருவரும்
        தன்னில் வேறிலான்
புன் தொழில் குரங்கொடு
        புணரு நட்பெனோ?

இந்த உலகமே ஒன்று கூடி எதிர்த்தாலும் வேறு துணை ஏதும் வேண்டுவதில்லை. அவன் கையில் உள்ள விஜய கோதண்டம் ஒன்றே போதும். அத்தகைய தன்னேர் இல்லாதவன் இராமன் சமான ரஹூதன். கேவலம் ஒரு குரங்கோடு நட்புக் கொள்வதால் அவன் பெறும் நன்மை என்ன?

***


நின்ற - நீண்ட காலமாக நிலை பெற்ற: பேர் உலகு எலாம் - பெரிய உலகங்கள் யாவும்; நெருங்கி - ஒன்றாகி; நேரினும் - எதிர்த்தாலும்; வென்றி வெம்சிலை அலால் -