பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

330

துணிக்கத்தக்க சமயம் என்று கருதி); சாதியில் - இனத்தில்; நிமிர்ந்தது ஓர் தலையை - நிமிர்ந்து விளங்கும் தோற்றம் உள்ளதொரு தலையை; பாதியின் மதிமுகம் பகழி ஒன்றினால் - அர்த்த சந்திரபாணம் ஒன்றினால்; தள்ளினான் - அறுத்து வீழ்த்தினான்.

***

கடலில் விழுந்த இராவணனின் தலை ஆரவாரம் செய்தது, இராமனின் தோளில் இராவணன் பதினான்கு அம்புகளை விட்டான்.

இராவணன் கையை இரகுவீரன் அறுத்தான். என்றாலும் அதுவும் முன்போல் முளைத்தது. அற்ற தன் கையை மற்றொரு கையால் எடுத்து அரக்கன் மாதலிமீது எறிகின்றான். மாதலி நிலை குலைகிறான். இராவணன் மாதலிமீது எறிந்த தோமரம் இராகவனால் துகளாக்கப் படுகின்றன.

இராகவன் இப்போது முழுமூச்சாக அரக்கனை அழிக்க முற்படுகிறான்.

***

ஓய்வு அகன்றது, ஒரு தலை
        நூறு உற,
போய் அகன்று புரள,
        பொரு கணை
ஆயிரம் தொடுத்தான்—
        அறிவின் தனி
நாயகன் கைக் கடுமை
        நடத்தியே.

ஞான நாயகனான இராமன் ஓய்வின்றி கைவிசையைச் செலுத்தி, இராவணனின் தலைகளை அறுத்தான்.