பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

331

என்றாலும் அவை மீண்டும் மீண்டும் முனளத்தன. எனவே வெகு தொலைவுக்கு அப்பால் அவை பலவிடங்களில் போய் புரளும்படி ஆயிரம் ஆயிரம் அம்புகளைத் தொடுத்தான்.

***

அறிவின் தனி நாயகன் - ஞானத்தின் ஒப்பற்ற தலைவனான இராமபிரான்; கைக்கடுமை நடத்துவான் - (தனது) கைவேகத்தைச் செலுத்துபவனாய்; ஓய்வு அகன்றது - ஓய்வு நீங்கப் பெற்றதாகி; (ஒழிவின்றி) ஒருதலை நூறு உற - ஒரு தலை நூறாக முளைக்கவும்; (அவை அனைத்தும்) அகன்றுபோய் - (வெகு தூரம்) நீங்கிச் சென்று; புரள - புரளுமாறு: பொருகணை - பொருதற்கு உரிய வாளிகள்; ஆயிரம் தொடுத்தான் - ஆயிரம் விடுத்தான்.

***

(இராவணனுடைய சிரங்களைக் கண்டன பேய்கள். முன்னர் இராவணனைக் கண்டு அஞ்சி அவனைச் சுற்றி பணிந்துவந்த பேய்கள், அவனுக்கு நேராக நின்று கண்களைத் தோண்டின. இதன் உட்பொருள் என்ன? ஒருவனுடைய புண்ணியம் அகன்றபின் அவனுடைய புகழ் முதலிய அனைத்தும் பழுதுபடும்.)

மூர்ச்சித்தான் இராவணன். அவனைக் கொல்லச் சொன்னான் மாதலி ‘நீதியன்று!’ என்றான் இராமன்.

இராவணனோ தன் தோளின் வரிசைகளில் சுமந்திருந்த ஆயுதங்களை இராமபிரான் மீது வீசி எறிந்தான். “இவனை வெல்வது எங்ஙனம்?” என்று ஆலோசித்தான் இராமன்.

***