பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

336


இராவணன் மாய்ந்ததை அறிந்தாள் அவன் மனைவி மண்டோதரி. ஓடி வந்தாள். அவன் உடலைத் தழுவினாள்.

***

என்று அழைத்தனள் ஏங்கி
        எழுந்து அவன்
பொன் தழைத்த பொரு அரு
        மார்பினைத்
தன் தழை கைகளால் தழுவித்
        தனி
நின்று அழைத்து உயிர்த்தாள்
        உயிர் நீங்கினாள்.

கணவனின் உடலைத் தழுவினாள் அவன் இன்னுயிர்த் துணைவி. அப்போதே அவ்வுடல் மீது அவளும் உயிர் துறந்து வீழ்ந்தாள். அதுகண்டு யாவரும் அம் மாதரசியைப் புகழ்ந்தனர்.

***

என்று அழைத்தனள் - கூக்குரலிட்டு அழுதவளாய்; (அந்த மண்டோதரி) ஏங்கி ஏக்கமுற்று, (பின்னர்) எழுந்துஎழுந்து அவன் - அந்த இராவணனுடைய; பொன் தழைத்தல் பொன் அணிகள் மிகுதியாக அணியப்பெற்றிருந்த; பொரு அரு மார்பினை - ஒப்பற்ற மார்பினை; தன் தழை கைகளால் தழுவி - தனது தளிர் போன்ற கரங்களால் அனைத்து; தனி நின்று - தனித்து நின்று அழைத்து - கூவி, உயிர்த்தால் - நெட்டுயிர்ப்புக் கொண்டு; உயிர் நீங்கினாள் - உயிர் நீங்கப் பெற்றாள்.

***

‘ஞானிகள், இறந்தவர்க்குறித்து, இறந்ததற்குத் துன்பப் படமாட்டார்’ என்ற உண்மையைக் கூறி விபீடணனை