பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

337

தேற்றுகிறான் இராகவன். இலட்சுமணனை வானர வீரர்களுடன்சென்று விபீடணனுக்கு முடி சூட்டுமாறு ஏவுகிறான். இளையவனும் அவ்வாறே செய்தான். முடிசூட்டப்பட்டபின் விபீடணன் இராமனிடம் செல்கிறான். தொழுகிறான்.

அப்போது இராமன் விபீடணனுக்கு என்ன கூறினான்?

***

உரிமை மூவுலகும்
        தொழ உம்பர்தம்
பெருமை நீதி
        அறன் வழிப் பேர்கிலாது
இருமையே அரசாளுதி
        ஈறிலாத்
தரும சீல என்றான்
        மறை தந்துளான்

எப்படி அரசு செலுத்த வேண்டுமென்ற அரச நீதியைப் போதித்தான். மூவுலகும் வணங்கும்படி, தேவர்கள் பெருந்தன்மை கொண்டும், நீதி, தருமம் ஆகிய நெறியுடன் அரசு செலுத்துமாறு கூறினான். “உனக்கு உரிய இலங்கை நாட்டின் புகழும் பெருமையும் நிலைப் பெற்றிருக்கும்படி ஆளுக.” என்றான்.

***

மறை தந்துளான் - ஆதியிலே வேதங்களை வெளியிட்டு அருளிய திருமாலின் அவதாரமாகிய இராமன்; (விபீஷணனை நோக்கி) ஈறுஇலா - அழிவு இல்லாத; தரும சீல - அற ஒழுக்கம் உடையவனே; மூவுலகும் தொழ - மூவுலகத்தினரும் உன்னை வணங்கிப் போற்ற; உம்பர்தம் பெருமை - தேவர்களின் பெருமைக்கும்; நீதி - அரச நீதிக்கும்; அறன் வழி - தரும மார்க்கத்துக்கும்; உரிமை - உரிய வழி நின்று;

கி.—22