பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

339

துறவுகோலம் விடுத்து, எல்லா அணிகலன்களை அணிந்து அலங்கரித்து வரவேண்டும் என்ற இராமனின் கட்டளையை ஏற்கிறாள் அன்னை. பிராட்டியை விமானத்திலேற்றி, இராமனிடம் அழைத்துச் செல்கின்றாள். பிராட்டி அண்ணலைக் கண்டு தொழுகிறாள்.

***


பிறப்பினுந் துணைவனைப் பிறவிப்
        பேரிடர்
துறப்பினுந் துணைவனைத் தொழுது
        நான் இனி
மறப்பினும் நன்றிது மாறு
        வேறு வீழ்ந்து
இறப்பினும் நன்று என்
        வேக்க நீங்கினாள்.

அண்ணலைக் கண்ட அன்னை தொழுதாள்; சேவித்தாள். “நான் இனி இப் பெருமானை மறக்க நேர்ந்தாலும் நல்லதே. இதற்கு மாறாக, இப்போது உயிர் நீங்கப் பெற்றாலும் நன்றே!” என நினைத்தாள். ஏன்? அவனே பிறப்பிலும் இறப்பிலும் துணைவன் என்பதால்.

***

பிறப்பினும் - (இப் பிறப்பில் மட்டுமன்றி) எந்தப் பிறவி எடுத்தாலும்; துணைவனை - (வாழ்க்கைத்) துணைவன் ஆகின்றவனும்; பேர் பிறவி இடர் துறப்பினும் - பெரிய பிறவித் துன்பம் ஒழிந்தாலும்; துணைவனை - என்றும் உயிர்த் துணைவனாகின்றவனுமான மூர்த்தியை; நான் தொழுது - (கண்ணுற்றுச்) சேவிப்பதனால்; இனி, மறப்பினும்-(அப் பெருமானை)மறக்க நேர்ந்தாலும்; நன்று - நல்லது; இது மாறு - இதற்கு எதிரிடையாக; வேறு வீழ்ந்து இறப்பினும் - வேறு வகையாக (நான்) விழுந்து உயிர்