பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

வெற்றி தரக் கூடிய அவனது வில் அல்லாது; பிறிதும் வேண்டுமோ - வேறு ஒரு துணை அவனுக்கு வேண்டுமோ? தன் துணை தன்னில் வேறு ஒருவரும் இலான் - தனக்குத் துணை தானே அல்லாது வேறு எவரும் இல்லாதவனாகிய இராமன்; புன் தொழில் -அற்பமான செயல் கொண்ட குரங்கொடு - ஒரு குரங்கினோடு; புணரும் நட்பு ஏனோ - கொள்ளும் நட்பு எதற்கு?

***

தம்பியர் அல்லது
        தனக்கு வேறுயிர்
இம்பரின் இல் என
        எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும்
        எதிர்த்த போரினில்
அம்பிடை தொடுக்குமோ?
        அருளின் ஆதியான்

இந்த உலகத்திலே தனது தம்பிகளைத் தவிர வேறு உயிர் தனக்கு இல்லை என்று எண்ணி அதற்கு ஏற்ப வாழ்பவன் இராமன். அப்படிப்பட்ட ஒருவன் நானும் என் தம்பியும் சண்டையிடுகிற போது நடுவிலே புகுந்து பாணம் விடுவானோ?

***

தம்பியர் அல்லது - தன் தம்பிகளே அன்றி, வேறு உயிர் - மற்றோர் உயிர்: இம்பரில் - இந்த உலகில்; தனக்கு இல் என - தனக்கு இல்லை என்று கருதி; ஏய்ந்தவன் - ஒன்றி வாழும் இயல்பு கொண்ட: அருளின் ஆழியான் - கருணைக் கடலான இராமன்; எம்பியும் யானும் - எனது தம்பி சுக்கிரீவனும் நானும்; எதிர்த்த போரில் - எதிர்த்து