பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

841

சீதை? பெண்மைக்கு இலக்கணமான அழகிய சீதை; தன்னை துன்புறுத்திய அரக்கியருக்கு அபயம் அளித்த மாதரசி சீதை; தருமமும் கற்பும் உருக்கொண்ட பதிவிரதை சீதை. அன்றைய பார்வைக்கும் இன்றைய பார்வைக்கும் எத்துணை வித்தியாசம்? மனத்தில்தான் எத்தனை முதிர்ச்சி!

அன்னை அவனைக் கண்டு கண்ணீர் உகுத்தாள். பத்து மாத பிரிவிற்குப் பின் கூடியபோது பெருகிய இன்பக் கண்ணீர் ஒருபுறம்; பிரிந்ததற்காக வருந்தி ஓடிய துன்பக் கண்ணீர் மற்றொருபுறம். இதைக் கண்ணுற்ற இராமன் அவளைசினந்து, கடிந்துரைத்தான். காரணம்? அந்தப் பெண் மயிலின் கற்புறுதியை வெளிப்படுத்த “உன்னை ஏற்பேன் என்ற நம்பிக்கையில் வந்தாயா?” என்பது முதல் சுடுசொல். தொடர்ந்து, “நான் கடல் தாண்டி அரக்கரைப் பொருது வென்று இலங்கேசனையும் கொன்றது, உன்னை சிறையினின்றும் மீட்க அன்று; மனையாளை பிறன் கவர யாதொன்றும் எதிராகப் புரியாதுவாளா இருந்தனன் இராமன் என்ற வசைக்கு அஞ்சியே அங்ஙனம் செய்தேன். மாற்றானிடத்தில் பத்து மாதமிருந்த நீ மாசற்றவள் என கொள்வதெங்ஙனம்?”

***


கலத்தினிற் பிறந்த மாமணியிற்
      காந்துறு
நலத்தினிற் பிறந்தன நடந்த
      நன்மைசால்
குலத்தினிற் பிறந்திலை கோவில்
      கீடம் போல்
நிலத்தினிற் பிறந்தமை நிரம்பினாய்
      அரோ.