பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/361

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

351


என்ன தாகுங் கொலவ்வர
        மென்றியேல்
சொன்ன நாளில் இராகவன்
        தோன்றிலன்
மின்னு தீயிடை யானினி
        வீடுவேன்
மன்னன் ஆதியென் சொல்லை
        மறாது என்றான்.

இராமபிரானைச் சித்திரக் கூடத்தில் சந்தித்து, அயோத்தி அரசை ஏற்கவேண்டுமென்று பதினான்கு ஆண்டுகளுக்கு முன் வேண்டிக்கொண்டான் அல்லவா? அப்போது இராமன் இன்று - பதினான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நாளன்று வருவதாக வாக்களித்தான். “அவன் சொன்ன நாளில் வரவில்லை. எனவே, முன்பு சூளுரைத்தபடி நான் தீயில் விழுந்து உயிர் துறப்பேன். நீ அயோத்திக்கு மன்னன் ஆவாய்!” என்று பரதன் சத்துருக்கனனிடம் கூறினான்.

***

(பின்னும் பரதன் இளவலைப்பார்த்து), அ வரம் என்னது ஆகும் கொல் என்றியேல் - அந்த வரம் யாதாகுமோ என்று வினவுவாயாகில் (கூறுவேன்); சொன்ன நாளில் - நான் வருவதாகச் சொல்லிய நாளில்; இராகவன் தோன்றிலன் - இராகவன் வரவில்லை; (ஆதலின் நான் முன்னரே சூளுரைத்தபடி)[1]


  1. ஆ மெனில் ஏழிரண்டாண்டில் ஐய நீ
    நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம்
    கோமுறை புரிகிலை என்னில் கூர் எரி
    சாம்; இது சரதம்; நின் ஆணை; சாற்றினேன்.

    (சித்திரக் கூடத்தில் பரதன் செய்த சபதம்)