பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/364

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

வழியில் மாகுதி பரதனுக்கு இதுவரை நடந்தவற்றைக் கூறிக்கொண்டே போகின்றான். கங்கை கரையும் அடைந்தாயிற்று. இன்னமும் இராமன் வரவில்லையே என்று ஏங்குகிறான் பரதன். குகன் தன் சேனையோடு வருகின்றான். சுக்ரீவனும் விபீடணனும் வருகின்றனர். இராமனும் விமானத்தில் வருவதைக்கண்டு பேருவகைக் கொள்கிறான் பரதன். விமானத்திலிருந்து இறங்கிய இராமன் வசிட்ட முனிவனை வணங்குகிறான். முதன்முதலில் கைகேயியை வணங்குகிறான். பின்னரே ஏனைய தாய்மாரையும் வணங்குகிறான்! பிராட்டியும் இளையவனும் வணங்கி, ஆசி பெறுகின்றனர்.

பரதன் லட்சுமணனை தழுவுகிறான்.


‘தனிமை நீக்கி, காடுறைந்தது
உலைந்த மெய்யோ கையறு கவலை
உரநாடுறைந்து உலைந்த மெய்யோ நைந்தது.’

என உலகம் நைந்தது.

வந்தவர்களை தம்பியர்க்கு அறிமுகம் செய்விக்கிறான் இராகவன். சுமந்திரனும் அமைச்சர்களும் வருகின்றனர். விமானம் நந்திக் கிராமத்தை அடைகிறது.

***


நம்பிய பரதனோடு நந்தியம் பதியை
        நண்ணி
வம்பலர் சடையும் மாற்றி
        மயிர் வின முற்றி மற்றைத்
தம்பியரோடு தானும் சரயுவின்
        புனலிற் தோய்ந்தே
உம்பரு மூவகை கூர ஒப்பனை
        ஒப்பச் செய்தார்.