பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

357

விரைசெறி கமலத்தாள் சேர் வெண்ணெயூர் சடையன் தன் மரபுளோர் - நறுமணம் வீசப்பெற்ற தாமரையில் வசிக்கும் திருமகள் சேர்ந்திருக்கப் பெற்ற திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளலின் முன்னோர்; கொடுக்க, வாங்கி வசிட்டனே - எடுத்துக் கொடுக்கவும் வசிட்ட முனிவனே; புனைந்தான் மௌலி - முடிசூட்டினான்.

பரதனுக்கு இளவரசு பட்டம் சூட்டப்படுகிறது.

முடிசூட்டு விழாவுக்கு வந்திருந்த அனைவர்க்கும் விடைகொடுக்க, ஶ்ரீராமன் சீதாதேவியுடன் ஓலக்க மண்டபம் வருகிறார். சிங்காதனத்தில் வீற்று, அந்தணர்களுக்கு தானமளிக்கிறார். வந்த அரசர்களுக்கும் வெகுமதி அளித்து விடை தருகிறார். குகன், அநுமன், விபீடணன், சுக்ரீவன் ஆகியோருக்கு விடை கொடுத்தனுப்ப, அவர்கள் தத்தம் இடத்திற்குச் செல்கின்றனர்.

***


வாழிய சீர் இராமன்
        வாழிய சீதை கோமான்
வாழிய கௌசலேசை
        மணி வயிறு உதித்த வள்ளல்
வாழிய வாலி மார்பு
        மராமரம் ஏழும் சாய
வாழிய கணை ஒன்று ஏவும்
        தசரதன் மதலை வாழி

***