பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

29

வெள்கிடும்; மகுடம் சாய்க்கும்
        வெடிபடச் சிரிக்கும்; மீட்டும்
உள்கிடும், “இதுவும் தான் ஒர்
        ஓங்கு அறமோ?” என்று உன்னும்
முள்கிடும்; குழியில் புக்க
        மூரி வெம் களி நல் யானை
தொள் கொடும் கிடந்தது என்னத்
        துயர் உழந்து அழிந்து சோர்வான்

யானைப் பிடிப்பவர்கள் பெரிய படுகுழி வெட்டி அதைப் பசிய இலைகளாலும், கரும்புக் கழிகளாலும் மூடி மறைத்து வைப்பார்கள். பாவம் ஒன்றுமறியாத யானை அதில் வீழ்ந்து விடும். அவ்வாறு வீழ்ந்த யானை சீறும்; துதிக்கையால் சாடும்; பெருமூச்சு விடும்.

அவ்வாறே துடித்தான் வாலி; வெட்கம் கொள்வான்: தலையிலே அணிந்த கிரீட்த்தைச் சாய்ப்பான்; பெருமுழக்கத்துடன் சிரிப்பான்; மீளவும் யோசிப்பான்; இவ்வாறு கணை ஏவுதலும் சிறந்த தருமமோ என்று எண்ணுவான்.

***


முள்கிடும் குழியில் புக்க - முழுகி அழுந்தத்தக்க பெருங்குழியிலே விழுந்து: மூரி வெம் களி நல் யானை - வலிமை மிக்க வெவ்விய மதங்கொண்ட சிறந்த ஆண் யானையானது; தோள் கொடும் கிடந்தது என்ன - வருந்திக் கிடந்தது போல; துயர் உழந்து - துன்பம் அனுபவித்துக் கொண்டு; அழிந்து - நிலை அழிந்து: சோர்வான் - தளர்வுறும் வாலி; வெள்கிடும் - வெட்கம் கொள்வான்; மகுடம் சாய்க்கும் - கிரீடம் அணிந்த தலையைச் சாய்ப்பான்; வெடிபடச் சிரிக்கும் - பெரு முழக்கத்துடன் சிரிப்பான்; மீட்டும் ஊகிடும் - மீளவும் யோசிப்பான்: இதுவும் தான் ஓங்கு அறமோ என்று உன்னும் - இவ்விதம்