பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

கொடிகள்; பம்பி – நிறைந்திருக்கவும்; (இளைய பெருமாளை) வலத்தினில் வந்தது - வலிமையோடு வளைத்துக் கொண்டது.

***

ட்சுமணன் தாரையைப் பார்த்தான். அவளை அவன் தன் தாயாகிய சுமித்திரையாக கண்டான். தாரையின் ரூபத்தில் தன் தாயையே கண்டான் அவள் பேச்சு அவன் கோபத்தைச் சிறிது தணித்தது.

அநுமன் வந்தான். “நீ உள்ளே வந்து நீங்கள் அளித்த செல்வத்தினால் சிறப்பு பெற்ற சுக்ரீவனை கண்டு சீற்றம் தணிவாயாக!” என்று அநுமன் வேண்டினான். லட்சுமணனும் சென்றான்.

தான் மதி மயங்கியிருந்ததற்கு வருந்தினான் சுக்கிரீவன். பெருஞ்சேனையை கொண்டு வருமாறு அநுமனுக்குக் கட்டளையிட்டுச் சுக்கிரீவன் இராமனிடம் சென்றான்.

***

போயின தூதரிற் புகுதும்
        சேனையை
நீ உடன் கொணருதி
        நெறிவலோய் என
ஏயினன் அனுமனை யிருத்தி
        ஈண்டு என
நாயகன் இருந்து உழிக் கடிது
        நண்ணுவான்

“நீதியில் வல்லோனான அநுமனே! நாலாபக்கமும் உள்ள சேனைகள் திரண்டு இங்கு வரும்வரை நீ இங்கேயே இரு” என்று சுக்கிரீவன் அநுமனுக்குக் கட்டளையிட்டான். ‘நான் இராமபிரான் இருப்பிடம் உடன் செல்கிறேன்’