பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

என்றான். “சேனைகள் வந்ததும் உடன் திரட்டிக் கொண்டு வா” என்று ஏகினான்.

***

(சுக்கிரீவன்) நெறிவலோய் - நீதியில் வல்லவனே; போயின தூதரின் புகுதும் சேனையை – (நம்மிடத்தினின்று) போயிருக்கிற தூதர்களாய் இனிவரும் வானர சேனையை; நீ உடன் கொணருதி - நீ உன்னுடன் அழைத்துவா; என - எனவும்; ஈண்டு இருத்தி - (அதுவரையில் நீ) இங்கேயே இருப்பாய்; என - எனவும்; அநுமனை ஏயினன் - அநுமனுக்குக் கட்டளையிட்டவனாய்; நாயகன் இருந்த வுழி கடிது நண்ணுவான் - (யாவருக்கும் தலைவனாகிய) இராம பிரான் இருந்த இடத்திற்கு விரைந்து செல்பவன் ஆனான்.

***

வானர சேனைகள் திரண்டு வந்தன. அவைகளைக் கண்டு இராம லட்சுமணர் வியப்படைந்தனர்.

இனி மேற்கொண்டு செய்ய வேண்டியவற்றைப் பற்றிக் கவனிக்கலாயினர்.

சேனைகளை திரட்டிவந்தவர்களில் முக்கியமானவர்கள் அநுமனும் சாம்பவனும்.

***

ஆயிரத்து அறு நூறு கோடியிற்
        கடையமைந்த
பாயிரப் பெரும்படை கொண்டு
        பரவையின் திரையில்
தாய் உருத்து உடனே வரத்
        தடநெடு வரையை
ஏய் உருப் புயம் சாம்பன்
        என்பவனும் வந்திறுத்தான்.