பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54


சீதையைத் தேடுவது எப்படி என்று ஆலோசனை நடக்கிறது. அப்போது சுக்கிரீவன் அநுமனைப் பார்த்தான். “மூவுலகும் திரியவல்ல பேர் ஆற்றல் படைத்தவன் நீ! அப்படி இருந்தும் சீதாபிராட்டியை தேடுவதில் உனக்குத் தயக்கமேன்? உன் தந்தையோ வாயு பகவான். வேகமாக எங்கும் புகும் வல்லமையுடையவன். அவர் மகனான நீ எவ்வகையில் குறைந்தவன்? நீ உன் சக்தியை உணர்ந்தாய் இல்லை.[1] உடனே வேலையைகவனி!” என்றான் சுக்கிரீவன்.

***

அவனும் – அச் சுக்கிரீவனும்; அண்ணல் அதுமனை - பெருமையிற் சிறந்த அதுமனை (நோக்கி); ஐய – நீ; புவனம் மூன்று - மூன்று உலகத்திலும்; நின் தாதை - உனது தந்தையாகிய வாயுவைப் போல; புக்குழல் - புகுந்து திரிகின்ற; தவன வேகத்தை – ( உனது) மிக்க வேகத்தை; ஓர்கிலை – உணராதவனாய்; தாழ்த்தனை – வீணாக தாமதித்து இருக்கிறாய்; கவனம் மாகுரங்கில் செயல் காண்டியோ – (நீ இவ்வாறு தாமதித்து) மற்றவர்கள் வேகமாகச் செல்லட்டுமென நினைக்கிறாயோ?

***

அநுமன் புறப்படுகிறான். அதற்கு முன் இராமபிரான் சீதா தேவியின் அங்க அடையாளங்களை விவரித்துக் கூறுகிறார். முக்கியமாக அந்தரங்கமான நிகழ்ச்சியைக் கூறுகிறார். காட்டிற்கு நான் தனியாகச் செல்கிறேன் என்றார் இராமன். பிராட்டி அதை எவ்வாறு மறுத்தார்


  1. அநுமன் அதிக வரங்கள் பெற்றிருந்தான். முன்பு ஆசிரமங்களில் புகுந்து யாக பாத்திரங்களை நாசம் செய்தான். முனிவர்கள் “இவனுக்குத் தன் பலம் தனக்குத் தெரியாமற் போகக்கடவது” என்று சபித்ததால் அநுமனுக்கு யாரேனும் ஊக்கம் கொடுத்தால்தான் தானியங்குவான்.