பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

என்பதை விளக்கமாக கூறினார். தன் அடையாளமாக கணையாழியும் கொடுத்து அனுப்புகிறார் இராமன் அநுமனிடம்.

***

சுக்கிரீவனது கட்டளைப்படி தென் திசை நோக்கிச் சென்ற அங்கதன் முதலிய வீரர்கள் பலவிடங்களிலுஞ் சீதையைத் தேடிக்கொண்டு சென்றனர். வழியிலேயே ஒரு மிகப் பெரிய பாலைவனம்; அதைக் கடக்கும்போது அவர்கள் வெப்பம் தாங்காது தவித்தனர்; சோர்வுற்றனர். அங்கேயிருந்த ஒரு பெரும் பள்ளத்தில் இறங்கினர். இருள் கவிந்தது. இது இராவணன் மந்திர சக்தியால் படைக்கப்பட்டது. வானரர் முயற்சியைத் தடுக்கும் நோக்கத்துடனே இராவணனால் ஏற்படுத்தப்பட்டது.

வெளியே வர இயலாது தவித்தனர் வானரர். சுயம்பிரபை என்றொரு தவப்பெண். அவள் வானரரை மீட்கும் வழியை அநுமனிடம் சொன்னாள். அதன்படி வானரர் அநுமனின் வாலைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினர் .

ஒரு மாத காலம் ஓடிவிட்டது. அநுமன் ஆகியோர் எடுத்த பணியை செய்தே முடிப்பதென்று உறுதி பூண்டு செயல்படுகின்றனர்.

***

முறையுடை எம்பியார் முடிந்த
        வாவெனாப்
பறையிடு நெஞ்சினன் பதைக்கு
        மேனியன்