பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

85


இந்த மாளிகைகள் எல்லாம் தேவேந்திரன் வாழ்வதற்குரிய மாண்புடையன எனின் அப்படிச் சொல்வதே குறையாகும். அப்படியானால் அரக்கரின் செல்வத்திற்கு எல்லையுண்டோ? உவமை கூற முடியுமா? முடியாது.

***

இணைய மாடங்கள் - இத்தகைய மாடங்கள்; இந்திரற்கு அமைவர எடுத்து வனையும் மாட்சிய என்னில் - தேவேந்திரன் வாழ்தற்குப் பொருந்தக் கட்டப்பெற்று அழகு செய்யப்பட்ட பெருமை உடையது என்று சொன்னால்; அச்சொல்லும் - அவ்வாறு கூறுதலும்; மாசு உண்ணும் - குறையாகும்; அனையதாம் எனின் - அவ்வாறு இந்திர மாளிகைக்கு ஒப்பாகக் கூறுதலே குற்றமாகும் எனும்போது; அரக்கர் தம் திருவுக்கும் - அரக்கர் தம் செல்வச் செழிப்புக்கும்; அளவை நினையலாம் - உள்ளதோர் எல்லையற்றதோர் அளவை மனத்தால் நினைக்கலாம்; அன்றி - அவ்வளவுதானேயன்றி; உவமையும் - உவமை கூறுவதும்; அன்னதா நிற்கும் - அவ்வாறே மாசுடையதாகும்.

***


மரம் அடங்கலும் கற்பகம்
        மலையெலாம் கனகம்
அர மடந்தையர் சில தியர்
        அரக்கியர்க்கு; அமரர்
உரமடங்கி வந்து
        உழையராய் உழல்குவர்: ஒருவர்
தரம் அடங்குவது அன்று இது!
        தவம் செயத் தகுமால்!

இலங்காபுரியிலே உள்ள மரங்கள் எல்லாம் கற்பகத்தருக்களே. வீடுகள் எல்லாம் பொன்மயம் ஆனவையே. அரக்கியரின் பணிப்பெண்டிர் யாவரும் தேவ மாதரே. இது