பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

எதனாலே? தேவர் தகுதி இழந்தனரா? இல்லை, இராவணன் செய்த தவத்தினாலே. ஆகவே தவமே செய்யத்தக்கது ஆகும்.

***

மரம் அடங்கலும் கற்பகம் - மரங்கள் எல்லாம் கற்பக மரங்களே; மனை எலாம் கனகம் - வீடுகள் யாவும் பொன்னால் ஆனவையே; அரக்கியர்க்கு அரமடந்தையர் சிலதியர் - அரக்கியர்க்குப் பணிப்பெண்டிர் தேவமாதர்; அமரர் உரம் அடங்கி வந்து உழையராய் உழல்குவர்- தேவர் தம் வலி குன்றி (இந்நகர்க்கு) வந்து (அரக்கர்க்கு) அருகில் நின்று குற்றேவல் செய்பவராய்ச் சூழ்ந்து வருவர்; இது - இவ்வாறு அமைந்த இத்தன்மை; ஒருவர் தரம் அடங்குவது அன்று - ஒருவர் தகுதியின் பால் அடங்கக் காண்பது அன்று; (ஆதலால்) தவம் செயத் தகும் - தவமே செய்யத்தக்கது ஆகும்.

***


தேவர் என்பவர் யாரும் இத்
        திரு நகர்க்கு இறைவற்கு
ஏவல் செய்பவர்; செய்கிலாதவர்
        எவர்? என்னில்
மூவர் தம்முளும் இருவர்
        என்றால் இனி முயலில்
தாவில் மாதவ மல்லது
        பிறிது ஒன்று தகுமோ.

தேவர்கள் எல்லாரும் இலங்கையரசனாகிய இராவணனின் ஏவல் செய்வோரே. அப்படிச் செய்யாதவர் எவர்? பிரும்மா, விஷ்ணு, சிவன் எனப்படும் மூவருள் இருவரே. அவர் யாவர் எனின் சிவனும் விஷ்ணுவுமே.

***