பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89

வாழும்; ஊழி நாயகன் திரு வயிறு ஒத்துளது - ஊழி இறுதிக் காலத்திலே உறையுமிடமாகிய திருமாலின் திரு வயிறு ஒத்து இருந்தது; ஆழி அண்டத்தின் வட்டமாயுள்ள அண்டத்தில் உள்ள (குதிரைகளுள்) அருக்கன்தன் - சூரியனுடைய; அலங்குதேர் - அசைகின்ற தேரில் கட்டியுள்ள; புரவி ஏழும் அல்லன - குதிரைகள் ஏழு நீங்கலாக மற்றக் குதிரைகள் எல்லாம்; ஈண்டு உள - இங்கே உள்ளன.

***


தழங்கு பேரியின் அரவமும்
        தகை நெடுங் களிறு
முழங்கும் ஓதையும் மூரி நீர்
        முழக்கொடு முழங்கும்;
கொழுங் குரல் புதுக்கும்தலையர்
        நூபுரக் குரலும்
வழங்கு பேர் அரும் சதிகளும்
        வயின் தொறும் அறையும்

அந்த இலங்கை மாநகரிலே பேரிகைகள் முழக்கத்தோடு யானைகளின் முழக்கமும் கேட்கும்; கடல் ஓசையும் கலந்து வரும். பெண்கள் காவிலே அணிந்த சிலம்பொலியுடனே அவர்கள் ஆடும் ஜதிசப்தமும் இடந்தொறும் கலந்து வரும்.

***

தழங்கு பேரியின் அரவமும் - ஒலிக்கின்ற முரசின் சப்தமும்; தகை நெடும் களிறு முழங்கும் ஓதையும் - சிறப்பமைந்த பெரிய யானைகளின் முழக்கமும்; மூரிநீர் முழக்கொடு முழங்கும் - கடல் ஓசையுடன் சேர்ந்து முழங்கும்; கொழும் குரல் புது குதலையர் - வளப்பம் பெற்ற குரலோடு (பேசும்போது எல்லாம்) புதியனவாகத் தோன்றும் குதலைச் சொற்களை வழங்கும் மகளிருடைய; நூபுரக் குரலும் - சிலம்பின் ஒலியும்; வழங்குபேர் அரும் ஜதிகளும் -