பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

கம்பன் சுயசரிதம்

தாங்கியிருக்கும் கோதண்டம் நல்ல அழகுடன் அமைந்திருக்கிறது. அதில் கட்டியிருக்கும் மணி ஒலிக்கும்போது - ஏன் ஒலிக்காத போதுமே அந்தக் ‘கருமணியின் நெடிய சிலை கண, கண, கண என்றே கம்பனுடன் சேர்ந்து பாடும்.’

இந்த அற்புதமான சிற்ப வடிவங்களுக்கெல்லாம் காலத்தால் முற்பட்டது என்று நான் கருதுவது திருச்சேறையில் உள்ள ராமன் சீதை சிலைகளைத்தான். திருச்சேறை கும்பகோணத்திற்குக் கிழக்கே பத்து மைல் தூரத்தில் உள்ள ஊர். அங்கு சாரநாதர் கோயிலில் வைத்திருக்கும் ராமனும் சீதையும் அழகுத் திருவுருவங்கள். செந்தாமரைக் கண்ணோடும், செங்கனி வாயினோடும், சந்தார் தடம்தோளொடும், தாழ் தடக்கைகளோடும், அம்தார் அகலத்தொடும் இருக்கும் வீரன் அவன். சிற்ப வடிவங்களுக்கு அழகு தரும் அந்தத் திரிபங்க நிலை அளவுக்கு மேற்படாமல் அற்புதமாக அமைந்திருக்கிறது. பக்கத்தில் நிற்கும் இராமானுஜன், இராமன் சீதையை உருவாக்கிய சிற்பியின் சிருஷ்டி அல்ல. இதைச் சொல்ல வெள்ளெழுத்து வேண்டாம். எல்லாவற்றிற்கும் மேலாக சீதை நிற்கின்ற ஒயில், அவள் உடுத்தியிருக்கும் உடை, அணிந்திருக்கும் அணியெல்லாம் அழகுக்கு அழகு செய்கின்றன. அன்று சீதையைப் பஞ்சவடியில் ராமன், பக்கலில் கண்டபோது சூர்ப்பனகை சொன்னாளே


கண்பிற பொருளில்ச் செல்லா
    கருத்தெனின் அஃதே; கண்ட
பெண்பிறந்தேனுக் கென்னில்
    என்படும் பிறருக்கு

என்று, அதையே சொல்ல வேண்டியிருக்கிறது நாமும் இன்று. மேலும் அங்குள்ள ராம லக்ஷ்மணர் கையிலிருந்து வில்லையும் (ஆம் புதிதாக வைக்கப்பட்டவைகளைத்தான்) நீக்கிவிட்டுப் பார்த்தால்தான் அந்தச் சிலைகளின் முழு அழகும் தெரியும். இந்த ராமனை எல்லாம் பாாக்க வேண்டும் என்ற ஆவலை