பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

101

கொள்ளிடத்திற்கும் காவிரிக்கும் இடையில் அமர்ந்த தீவிலே ஸ்ரீரங்கமும் திருவானைக்காவும் உருவாயிற்று என்றால், இரண்டு கோயிலுக்கு இடையில் உள்ள தூரம் இரண்டு மைலுக்கும் குறைதான். ஆனைக்கா அண்ணல் மேற்கே நோக்கி நின்றால், அவருக்கு நேரே காலை நீட்டிக் கொண்டு அலக்ஷியமாக பள்ளி கொண்ட ரங்கநாதர் அறிதுயில் அமர்ந்திருப்பார். நாயக்க மன்னர்கள் கட்டிய சிவன் கோயில்களில் எல்லாம் இலிங்கம் இருக்கும். கர்ப்பக்கிருஹத்தின் வெளிச்சுவரிலே மேற்கே பார்க்க. ஆம் சிவலிங்கத்தினைத் திரும்பிக் கூடப் பார்க்காத பெருமாளையே நிறுத்தி இருப்பார்கள். இப்படி இவர்கள் நிற்கிறார்களே என்று கண்டுதான் ஒரு சில பக்தர்கள் ஒரு கோயில் மதில்களுக்குள்ளேயே இரண்டு பேரையும் பிரதிஷ்டை செய்து வைத்துப் பார்த்திருக்கிறார்கள். பிரபலமான சிதம்பரம் கோயிலில் நடராஜன் சந்திக்கு அருகிலேயே கோவிந்தராஜப் பெருமாளுக்கும் சந்நிதி உண்டு. சிக்கல் சிங்கார வடிவேலவரோ தந்தை வெண்ணெய் வண்ணப் பெருமானுக்கும், தாய்மாமன் நவநீத கிருஷ்ணனுக்கும் இடத்தை ஒழித்துக் கொடுத்துவிட்டுத் தான் கொஞ்சம் ஒதுங்கியே நின்று கொள்கிறார். இப்படி, இன்னும் சில கோயில்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்றாலும் இருவருக்கும் இடையில் உள்ள வெளிமட்டும் குறையவில்லை.

இந்த நிலையில் ஓர் ஊரில் இரண்டு கோயில்கள். ஒன்று சிவன் கோயில் மற்றொன்று பெருமாள் கோயில். பெருமாள் கோயில் கிழக்கே பார்த்து, சிவன் கோயில் மேற்கே பார்த்து வழக்கமாக கிழக்கே பார்த்து நிற்கும் சிவனும் மைத்துனன் பேரில் உள்ள கோபதாபத்தையெல்லாம் விட்டு மேற்கே பார்க்கத் திரும்பி, பெருமாளுக்கு எதிராக நிற்கிறார். இரண்டு கோயிலுக்கும் இடையில் இரண்டு மூன்று பர்லாங்கு இருந்தாலும், இருவருடைய சந்நிதித் தெருவும் ஒரே தெருதான். சிவன் கோயில் மேலவிதியும் பெருமாள் கோயில்