பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/105

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

103

வளர்க்க உறுதுணையாக நின்றிருக்கிறது இந்த ஊர். கம்பன் பிறந்த ஊர் என்று இந்த ஊர் பெருமைப்படுகிறது போலவே இந்த ஊரிலே பிறந்தோமே நாம் என்று கம்பனும் பெருமைப்படலாம் என்று தோன்றுகிறது எனக்கு.

கம்பனைப் பற்றிய விவாதங்கள் எத்தனை எத்தனையோ என்றாலும், அவன் பிறந்த ஊர் திருவழுந்தூர் என்பதைப் பற்றி இன்றுவரை விவாதமே இல்லை. இதை பேராசிரியர் வையாபுரி பிள்ளையவர்கள்கூட மாற்றிச் சொல்லக் காணோம்.

நாராயணன் விளையாட்டெல்லாம் என்ற பாடல் திருவழுந்தூரில் வாழ்ந்தவன் கம்பன் என்று தான் கூறுகிறது என்றால்

கம்பன் பிறந்த ஊர்
...

என்ற பாடல் கம்பன் பிறந்த ஊர் இந்த திருஅழுந்தூர் என்றே அறுதியிட்டு உணர்த்தி விடுகிறது. வேதங்கள் அறைகின்ற உலகெலாம் என்று அந்த ஊரில் கோயில் கொண்டிருக்கும் வேதபுரி ஈஸ்வரனைப் பாடிய வாயிலேயே

தாய் தன்னை... அறியாத கன்றில்லை

என்று அங்கே இருக்கும் அமருவியப்பன் பெருமாளையும் பாடியிருக்கிறான் கம்பன். இந்த அத்தாட்சி போதாதா நமக்கு.

இந்த ஊர் மாயவரம் என்னும் பிரபலமான மாயூரத்தினுக்குத் தென்மேற்கே மூன்று மைல் தொலைவில் குத்தாலத்துக்குத் தென்கிழக்கே இருக்கிறது. இப்போது ரயில்வேக்காரர்கள் கூட ஒரு சின்ன கொடி வீட்டை (Flag Station) அங்கு வைத்திருக்கிறார்கள். அத்தோடு அழுந்தூர் கம்பன் மேட்டுக்கு இங்கே இறங்குங்கள் என்று ஒரு பெரிய போர்டு வேறே எழுதித் தொங்கவிட்டிருக்கிறார்கள். ஊர் அந்த ரயில்வே ஸ்டேஷனிலிருந்து இரண்டு மைல் தூரத்தில்