பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/110

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது6. கம்பன் கவிச்சித்திரம் வர்ணனை

ந்தனமும், சண்பகமும், தேமாவும், தீம்பலமும், ஆசினியும், அசோகமும், கோங்கும், வேங்கையும், கரவையும் விரிந்து நாகமும் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மெளமொடு மனம் கமழ்ந்து, பாதிரியும் பாவை ஞாழலும் பைங்கொன்றையொரு பினி அவிழ்ந்து பொரிப்புன்கும் புன்னாகமும் முருக்கொரு முகை சிறந்து, வண்டறைந்து, தேனார்ந்து, வரிக்குயில்கள் இசைபாட தண்தென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிவது நடுவன் ஒரு மாணிக்கச் செய்குன்றின்மேல் விசும்பு துடைத்து பசும்பொன் பூத்து வண்டு துவைப்பத்தன் தேன் துளிப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கை கண்டார் என்பது ஒரு வர்ணனை. இதே கதியில் ஒரு பொழிலிடத்தே தலைவி ஒருத்தியும், தலைவன் ஒருவனும் கொடுப்பாரும், அடுப்பாரும் இன்றி ஊழ்வினை வயத்தால் எதிர்ப்பட்டு காதல் வயப்படுவதை மேலும், மேலும் வர்ணிக்கிறார் நல்லிசைப் புலவர் நக்கீரர் தமது இறையனார் அகப்பொருள் உரையில்.

இதைப் போன்ற ஒரு காட்சியைத்தான் கவிச்சக்கரவர்த்தி கம்பரும் வர்ணிக்க முற்படுகின்றார். தனக்கே உரிய ஒரு அற்புத முறையில் மாலைப்பொழுதில் மெல்லிய தென்றல்