பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

{{rh|116||கம்பன் சுயசரிதம்}

தருமத்தின் வேலியான ராமனைப் பற்றி சொல்லத் தகாதவற்றை எல்லாம் சொல்கிறாய் என்று கொதித்தே எழுகிறான். ராமன் எவ்வளவு பெரிய அரசன். அவனா இந்தப் புன் தொழில் குரங்காம் சுக்ரீவனை நாடி வந்து நட்பு கொண்டாடப் போகிறான். அத்தோடு தம்பியர் வாழ்வே தன் வாழ்வு என மதித்து ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே தன் தம்பிக்கு கொடுத்துவிட்டு வந்திருக்கும் ராமன் என் தம்பியும் நானும் போட்டுக் கொண்டிருக்கும் தாயாதிச் சண்டையில் இடைபுகுந்து என் தம்பிக்கு உதவ வருவானோ? என்று ராமனின் நேர்மையில் மிக்க நம்பிக்கை உடையவனாக இருக்கிறான்.

தம்பியர் அல்லது தனக்கு வேறு உயர்
இம்பரில் இலது என எண்ணி ஏய்ந்தவன்
எம்பியும் யானும் உற்று எதிர்ந்த போரிடை
அம்படை தொகுக்குமோ அருளின் ஆழியான்

என்றெல்லாம் தாரையை எதிர்த்துப் பேசிவிட்டு என் தம்பி சுக்ரீவனின் உயிர் குடித்து, அவன் உடன் வந்தால் யார் என்றாலும் அவர்களையும் அழித்து விரைவில் வருவேன் கலங்காதே என்று சொல்லித் தேற்றிவிட்டுப் போருக்குப் போகிறான். தாரையும் அதன்பின் உரைவிளம்ப அஞ்சி ஒதுங்கிக் கொள்கிறாள் என்று கம்பன் அவள் அரங்கத்தில் தோன்றும் முதல்காட்சியை முடித்துக் கொள்கிறான்.

வாலிக்கும் சுக்ரீவனுக்கும் போர் நடக்கிறது. இருவரும் போர் எதிரும்போது யார் வாலி யார் சுக்ரீவன் என்று வேற்றுமை அறிய இயலாது போய்விடுகிறது ராமனுக்கு. ஆதலால் திட்டமிட்டபடி வாலி மீது அம்பு எய்ய இயலவில்லை, அவனுக்கு. அதனால் சுக்ரீவன் போரில் நலிந்து திரும்புகிறான். அவனை கொடிப் பூ மாலை ஒன்று அணிந்து திரும்பவும் போருக்குச் செல்லச் சொல்கிறான் ராமன். அப்படியே செல்கிறான் சுக்ரீவன். அச்சமயத்தில் மறைந்து