பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

121

தோன்றுகிறது எனக்கு. தாடகை சூர்ப்பனகை போன்ற அரக்க மகளிர் ஆனாலும் சரி, ரூமை, தாரை போன்ற வானர மகளிர் ஆனாலும் சரி, அவர்களுமே பெண்ணிற் பெருந்தக்க யாவுள என்னும் வள்ளுவர் கூறும் பெண்மை நலம் தருகிற புகழையே ஏற்றவர்களாய் வாழும் நெறியையே உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று எண்ணியிருக்கிறான். இதை விளக்க இன்னும் ஒரேயொரு சிறிய உதாரணம் கொடுத்தால் போதும்.

காவியத்தோடு அவயவ சம்பந்தமில்லா கதைதான் அகலிகை, விமோசனம். கல்லாய்க் கிடைத்த அகலிகை ராமனது பாதத்துளியால் சாபம் நீங்கிப் பழைய பெண்ணுரு பெறுகிறாள். அவள் கதையைச் சொல்கிறார் விஸ்வாமித்திரர், அகலிகை என்னும் அழகிய பெண்ணை தேவேந்திரன் காதலிக்கிறான். ஆனால் கோதம முனிவர் அவளை மனைவியாய் அடைகிறார். பிறன்மனை நயவாத பேராண்மை படைத்திராத இந்திரன் அகலிகையை எப்படியும் அடைய விரைகிறான். நடுயாமத்திற்கு முன்பே கோழியைக் கூவ வைத்து கோதமனை பர்ணசாலையினின்று ஆற்றங்கரைக்கு அகற்றுகிறான். பின்னர் கோதமன் உருவிலேயே பர்ணசாலையில் புகுந்து அகலிகையைப் புணர்கிறான். திரும்பி வந்த கோதமன் நடந்ததை அறிந்து இருவரையும் சபிக்கிறார். இக்கதையை வான்மீகி சொல்லும் போது புதிதாக வந்திருப்பவன் இந்திரன் என்று அறிந்த பின்னும் அவனுடன் கூடி மகிழ்ந்திருந்தாள் என்பார். தேவராஜருதுசலஹ என்பது வான்மீகர் வாக்கு. இதையே திருவானைக்கால் புராணம் உடையார்

இந்திரனே நமை இருக்கின்றானோ
புந்தியின் அரும்பிய பொருவில் ஓதையார்

என்று கூறுவார். ஆனால் கம்பனோ அகலிகையை நெஞ்சினால் பிழைப்பிலாள் என்றே கூறுகிறான். புதிதாக கோதமன் உருவில் வந்த இந்திரன் புதிய ஆள் என்று பயிர்ப்பு