உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8கம்பனும் டி.கே.சியும்


ராமனும் அனுமனும் ஒருநாள் அயோத்தியிலிருந்து வெளியூருக்குப் புறப்படுகிறார்கள். போகிற வழியில் ஒரு ஆற்றைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஆற்றிலோ வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. படகு இல்லாமல் ஆற்றைக் கடக்க முடியாது என்று படுகிறது ராமனுக்கு. ஆனால் அனுமனோ ராமா, ராமா என்று சொல்லிக்கொண்டே ஆற்றில் இறங்கி விடுகிறான். ஆற்றில் ஓடிய வெள்ளமும் அப்படியே ஸ்தம்பித்து நின்று ஓர் ஆள் போகக்கூடிய அளவிற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. அனுமன் ஆற்றைக் கடக்கிறான், ராம நாம ஸ்மரணை செய்து கொண்டே, ராமனும் அவன் பின்னாலேயே இறங்கி, நடந்தே கடக்கிறான் ஆற்றை.

இப்படி ஒரு கதை. கதை உண்மையாய் இருக்க வேண்டும் என்பதில்லை. ராமனால் சாதிக்க முடியாத ஒன்றை, ராமநாமத்தில உள்ள அளவற்ற நம்பிக்கை காரணமாக, அனுமனால் சாதிக்க முடிந்தது என்பதுதான் விஷயம். ராம பக்தியில் அத்துணை அசையாத நம்பிக்கை அனுமனுக்கு.

இதேபோலத்தான் கம்பனுக்கும் டிகேசிக்கும் இருந்த உறவு. டிகேசிக்குக் கம்பன் கவிதையில் இருந்த நம்பிக்கை, கம்பனுக்கே அவன் கவிதையில் இருந்திருக்கும் என்று