பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

கம்பன் சுயசரிதம்

காட்டினார்கள். கவிதையைப் படிப்பது என்பது அவர்களுக்குப் பிடிக்காத காரியங்களில் முதன்மையானது. கவி என்றால் பாடுவதற்கு என்று அமைந்ததே ஒழிய படித்து ஆராய்வதற்கு என்று ஏற்பட்டது அல்ல என்பது அவர்களுடைய தீர்மானமான அபிப்பிராயம். அதனால்தான், அவர்கள் முன்னிலையில் ஐந்தாறு பேர் இருந்தாலும் சரி, ஆயிரக்கணக்கானவர்கள் இருந்தாலும் சரி, எல்லோரும் அனுபவிக்கும்படி கம்பன் பாடல்களைப் பாடுவார்கள். பாடும்போது தாளலயம் (Rhythm) அறிந்து பாடுவார்கள். பாடும் கவிதையில் ஜீவநாடியான தாளலயத்தை மற்றவர்களும் அறிந்து அனுபவிக்கும் முறையில் பாடுவார்கள். பாடல்களை, பாடல்கள் உள்ள வரிகளை ஒரு தரம் அல்ல, பலமுறை மடக்கி மடக்கிப் பாடுவார்கள். கேட்பவர்கள் எல்லாம் இனிதாக, எளிதாக மனனம் பண்ணிவிடக்கூடிய வகையில் பாடுவார்கள். பாடல்களில் பிரதிபலிக்கும் கம்பனின் இதயத்துடிப்பை எல்லோரும் உணரும்படிப் பாடுவார்கள். அவர்களுடைய பாவம் நிறைந்த சரீரத்தில், ஒரு பாட்டை நிதானமான நடையில் ஆங்காங்கே நிறுத்தி இரண்டு மூன்று தடவை மடக்கி மடக்கிப் பாடுவதைக் கேட்டாலே அந்தப் பாட்டின் பொருள், அதன் அழகு, பாவம் எல்லாம் தெரிவதுடன் நம் கண்முன் ஓர் அற்புதச் சித்திரமே உருவாகும். அப்படித் தோன்றும் சொற் சித்திரங்களைப் பகைப்புலனாக வைத்து உயர்ந்த தத்தவங்களை விளக்கும்போது சுவர்க்கபோக அனுபவமே பெறுவோம் நாம்.

ஒரு சபையில் அவர்கள் பேசுகிறார்களென்றால் கம்பன் அங்கு வராமல் இரான். கம்பன் வருகிறான் என்றால் அவன் பாடல் வருகிறது என்றுதானே அர்த்தம்? பாடல் வந்தால் நல்ல சவுக்கமாகவே வரும். என்னுடைய முதல் அனுபவம் 1925 ஆம் வருஷம் நான் திருநெல்வேலி இந்து கல்லூரியில் மாணவன். அங்கு எங்கள் கல்லூரி மாணவர் கழகத்தின் ஆண்டு விழாவில் டிகேசி பேசினார்கள். நூற்றுக்கணக்கான