பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/132

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130

கம்பன் சுயசரிதம்

இப்படி ஒன்றல்ல, இரண்டல்ல, எண்ணற்ற கம்பன் பாடல்களை, அவர்கள் மேடைமீது நின்று பாடும்போது கேட்டிருக்கிறேன். என்னைப்போல் கேட்டவர்களும் பலர் இருப்பார்கள்.

கானாள நிலமகளைக் கைவிட்டுப்
    போனவனைக் காத்துப் பின்பு
போனானும் ஒரு தம்பி போனவர்கள்
    வரும்அவதி போயிற்று என்னா
ஆனாத உயிர்விடஎன்று அமைவானும்
    ஒருதம்பி அயலே நாணாது
யானோஇவ் வரசுஆள்வென் என்னே
    இவ்அரசாட்சி இனிதே அம்மா

என்பது போன்ற கம்பன் பாடல்கள் எல்லாம், அவர்கள் பாடிக் காட்டியதால், தமிழ் அன்பர்களிடையே பிரசித்தமானவை. இந்தப் பாடலை அவர்கள் பாடிக் காட்டினார்கள் என்றால்; கவிதையில் தாளலயம் எப்படி அமைந்து கிடக்கிறது, அப்படி அமைந்து கிடப்பது காரணமாகவே எப்படி அது கவிதையாகிறது, என்கிற விஷயம் எல்லாம் விளங்கிவிடும்.

நாமும் மேடைகளில் பலர் பேச்சைக் கேட்டிருக்கிறோம். அதிலும் கம்பராமாயணப் பிரசங்கம் என்றால், சொல்ல விரும்பும் பாடலை அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து, சொல்லுக்குச் சொல் ஐந்தாறு அர்த்தங்கள் சொல்லி, கேட்பவர்களை எல்லாம் பிரமிக்க வைப்பது என்பதுதான் தமிழ்நாட்டில் நிலவி வந்திருக்கிறது. இன்னும் அந்தப் பழக்கம் இருக்கிறது ஒரு சிலரிடம். இந்தப் பிரசங்கங்களுக்குப் பக்கபலமாக பாரதம் பாட்டு அறாது, ராமாயணம் பொருள் அறாது என்று பழமொழிகூட எழுந்துவிட்டது. ஆனால் டிகேசியின் பேச்சு இப்படிப் பிரசங்கமாகவோ சொற்பொழிவாகேவா இருக்காது. பேச்சில் பதவுரையோ பொழிப்புரையோ கருத்துரையோ வரவே வராது. ஆனால்