பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

135

வேண்டுவது அவசியம் என்பதையோ, மறுப்பவர்கள் இல்லை. டிகேசியின் பேரில் புகார் சொல்கிறவர் கூட களையை வெட்டுகிற வேகத்தில் கொஞ்சம் பயிரையும் சேர்த்து வெட்டிவிடுகிறார்கள். இவ்வளவு கவிகளைச் செருகு கவிகள் என்று தள்ளியிருக்க வேண்டாம் என்றுதான் அங்கலாய்க்கிறார்கள். டிகேசிக்கு முன்னால் எத்தனையோ பேர் கம்பராமாயணத்தைக் கற்றிருக்கிறார்கள், பேசி இருக்கிறார்கள். பதிப்பித்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நினைவு கூற வேண்டியவர்கள் வ.வெ.சு அய்யர், டாக்டர் சாமினாத அய்யர், வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார், ரா. ராகவ அய்யங்கார், கோவிந்தராஜ அய்யங்கார், டி.என். சேஷாசலம் முதலியவர்கள். இவர்களில் பலருக்குக் கம்பராமாயணத்தில் செருகுகவிகள் உண்டென்று தெரியும். அதைச் சொல்லவோ அல்லது களையவோ துணிவு பிறக்கவில்லை. அவ்வளவுதான். ஆனால் அந்தக் காரியத்தை மிக்க துணிவோடு திறம்பட நிறைவேற்றியவர்கள் டிகேசி.

கம்பராமாயணத்தில் உள்ள செருகு கவிகளை எப்படி எப்படி டிகேசி கண்டுபிடித்தார்கள்? அதை அவர்களே சொல்கிறார்கள்.

“கம்பருடைய கவிகளுக்குத் தனியான ஒரு சுவை உண்டு செய்யுளினங்கள் பூர்வமானவைதான். ஆனால் இதய பாவத்தை உட்கொண்ட செய்யுள்கள் அடியெடுத்து வைக்கும்போது, தனியான கதிநயங்களைக் காண்கிறோம். அவைகளின் பாவமும் வேகமும் எங்கேயோ இருந்து வந்த மாதிரி புத்தம் புதியவையாய் இருக்கும். ஒவ்வொரு செய்யுளிலும் ஒரு தனியான ரசம், கவிக்கு ஏதோ நவரஸம் என்கிறார்கள். ஆனால் கம்பருடைய கவிகளைப் பார்க்கும்போது ஆயிரக்கணக்கான ரஸங்கள் உண்டென்று சொல்ல வேண்டி இருக்கிறது. இப்படித் தனித்த ரஸம் வாய்ந்த, உயிர்த் தத்துவம் வாய்ந்த கவிகளாய்