பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

136

கம்பன் சுயசரிதம்

இருப்பதாலேயே கம்பருடைய கவிகளை இனம் கண்டு கொள்ள முடிகிறது.”

கம்பருடைய பாடல்களை இனம் கண்டுபிடித்த பின் மற்றவைகளைச் செருகு கவிகள் என்று ஒதுக்குவதில் சிரமம் இருக்காதல்லவா? இதைப் பற்றி நல்ல நகைச்சுவையோடு ஒரு கதை சொல்வார்கள்.

கம்பர் ஏதோ ஒதுங்கலான ஒரு குக்கிராமத்தில் ஒரு பிரபுவோடு தங்கியிருந்தார். மாலையில் ஒரு புலவர் கோயிலில் கம்பராமாயணப் பிரசங்கம் செய்யப் போவதாகவும் அதற்குப் போய்வரலாம் என்றும் அந்தப் பிரபு கம்பரிடம் சொன்னார். கம்பரும் இசைந்தார். இருவருமாகப் போனார்கள். புலவர் வெகு தடபுடலாய்ப் பிரசங்கம் செய்தார். அநேக பாடல்களை அபாரமாக அனுபவித்துப் பாடினார். பிரசங்கம் முடிந்ததும் புலவருக்கு கம்பரை அறிமுக்கப்படுத்தினார் பிரபு. புலவர் ரொம்ப ரொம்ப சந்தோஷப்பட்டவராய் கம்பரைப் பார்த்து, “அடடா தங்கள் கவிகள் அனைத்தும் அற்புதமாய் அமைந்திருக்கின்றன. அன்னை கலைமகளின் அருள் கொழித்த அருமை கவிகள்தான் அவை” என்று பாராட்டினார். அதற்கு கம்பர், தாங்கள் பாடிய பாடல்களில் ஒன்றிரண்டு என்னுடையதாகவும் இருக்கின்றன. ரொம்ப சந்தோஷம் என்று பதில் சொன்னார்.

இதிலிருந்து கம்பன் காலத்திலேயே அவர் காவியத்தில் செருகு கவிகளைச் செருக முனைந்துவிட்டார்கள் மற்ற கவிஞர்கள் என்று தெரிகிறதல்லவா? செருகு கவிகளை அகற்ற வேண்டியதன் அவசியத்தைப் பற்றி அவர்களே சொல்லியிருக்கிறார்கள் அருமையான நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில்

“அயோத்தியா காண்டத்தில் விட்டது விடாதது எல்லாவற்றையும் நன்றாய்க் கணக்குப் போட்டுப்