உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

140

கம்பன் சுயசரிதம்

கெடுத்தான் படித்தவன் பாட்டைக் கெடுத்தான் என்பதெலலாம் நமக்குத் தெரியும்தானே? அப்படி இருக்க கம்பன் பாடல்களில் எழுதியவர்கள் செய்த தப்பிதத்தால் பிழைகள் இருந்தால் பிழைகள் இருக்கின்றன என்று நம்பினால் அவைகளைத் திருத்துவதில் தப்பென்ன? சுந்தரர் தேவாரத்தில் ஒரு பாட்டு. பாட்டு இதுதான்.

மையார் கண்டத்தினாய் மத
    மாவுரி போர்த்தவனே
பொய்யாதுழ என்னுயிருள் புகுந்தாய்
    முன்னம் போந்தறியாய்
கையார் ஆடரவா கடவூர் தனுள்
    வீரட்டத்து எம்
ஐயா, என் அமுதே எனக்கு
    ஆர்துணை நீ அலதே

இதில் இரண்டாவது அடியில் இன்னம் போந்தறியாய் என்றிருந்ததை முன்னம் போந்தறியாய் என்று திருத்தியிருக்கிறார்கள். டிகேசி அதற்குக் காரணமும் சொல்கிறார்கள்.

இரண்டாவது அடியிலுள்ள விஷயம், உண்மையாகவே இப்போது என் உள்ளத்துக்குள் புகுந்து கொண்டாய் கடவுளே, ஏமாற்றமான காரியம் அல்ல. ரொம்ப ரொம்ப சந்தோஷம். இதற்குமுன் வர வழி தெரியாமல் தானே போயிற்று என்பதான ஹாஸ்யமும் எக்களிப்பும் கலந்த பாவத்தில் நிற்பது. முன்னம் போந்தறியாய் என்பதில் பொருள் தெரிகிறது அல்லவா? இதைக் காணாமல் இன்னும் போந்தறியாய் என்று பிழையாய் எழுதிவிட்டார் படி எடுத்தவர். இந்தப் பாடத்துக்குப் பொருள் ஏது? பொய்யாது என்னுயிருள் புகுந்தாய் என்பதோடு பொருந்தவில்லையல்லவா? பிழைபட்ட பாடத்தோடு சங்கடப்பட்டுக் கொண்டிருப்பதில் பிரயோஜனம் என்ன? copyist முக்கியமா? ஜட்ஜ் முக்கியமா? ஜட்ஜ் அபத்தமாக