பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

144

கம்பன் சுயசரிதம்


இருக்கிறதே அது அலாதியானது, குழந்தை செய்யும் தவறுகள் எல்லாம் தந்தைக்குத் தெரிவதே இல்லை. அதிலும் பிறர் எடுத்துக்காட்டிவிட்டாலோ கன கோபம்தான் வரும். தவறை தவறு அல்ல என்று சாதிப்பதில் தந்தை முனைந்து விடுவார். ஏன் சண்டைக்கே புறப்பட்டு விடுவார். இதேபோலத்தான் தெய்வத்தினிடமும், தெய்வம் செய்கின்ற காரியங்கள் பல நமக்குப்புரிவதில்லை. ஆனால் ஒரு அசையாத நம்பிக்கை, அது செய்கின்ற காரியங்கள் அத்தனையும் சோடையல்ல என்று. சோடையாக இருந்தால் அது தெய்வம் செய்ததல்ல என்று திடமான அபிப்பிராயம் என்றார்கள். டிகேசியின் கம்பன் பக்திக்கு எவ்வளவு அற்புதமான வியாக்யானம். இந்த வியாக்யானத்தைப் புரிந்துகொண்டால் டிகேசியோடேயோ அல்லது டிகேசியுடைய திருத்தங்களோடேயோ எவரும் முட்ட வேண்டிய அவசியமே இருக்காதே.

டிகேசி கம்பனோடு நாற்பது வருஷ காலத்திற்கு மேலாக வாழ்ந்தவர்கள். அவன் காவியத்தில் நுழைந்திருக்கும் செருகு கவிகளை அகற்றவோ, அவன் கவிகள் எழுதுபவரது கவனக்குறைவால் பிழைபட எழுதப்பட்டிருந்தால் அந்தப் பிழைகளைத் திருத்தவோ தகுதி உடையவர்கள், உரிமையும் உடையவர்கள். இந்த உரிமையை மறுக்க, நாம் யார்? என்று தான் கேட்கத் தோன்றுகிறது எனக்கு.

“கம்பருக்கு நான் செய்த சேவைகளில் எல்லாம் பெரிய சேவை அவரை அனுபவித்ததுதான். நான் அறிந்த காரியத்தை ஊரார் அறிந்ததில்லையே என்று சொன்னால் ஈடுபாட்டைக் குறிக்கிறதே ஒழிய அகம்பாவத்தைக் குறிக்காது” என்று அவர்கள் சொல்லும்போது அவர்கள் உள்ளத்தையல்லவா அப்படியே திறந்து காட்டுகிறார்கள்? இது போதாதா நமக்கு?

கம்பர் பிறந்தது திருவழுந்துரிலே, வளர்ந்தது வெண்ணெய் நல்லூரிலே வள்ளல் சடையப்பர் இல்லத்தில்.