பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. கம்பன் காவிய மாளிகை

தாஜ்மஹால் தலைதுாக்கி நிற்கிறது நமது நாட்டிலே. அதைக் கட்டி முடிக்க வேலை செய்தவர்கள் இருபதினாயிரம் பேர். பிளான் தயாரித்தவர்கள், சிற்பிகள், வர்ண வேலைக்காரர்கள், கொத்தனார்கள் எல்லாருக்குமே கட்டிட நிர்மாணத்தில் பங்கு உண்டு. இப்படி ஒரு கட்டிடம் கட்டலாம் என்று முதல் முதல் திட்டம் வகுத்தவர் (Designer) முகமது இசாகிபண்டி. இவர் துருக்கி தேசத்தவர். இவருடன் துணையாக வர்ண வேலை செய்ய அங்கிருந்தே வந்தவர் சத்தார்கான். சமர்க்கண்டிலிருந்து வந்த முகம்மது ஹரீப்தான் தலைமை டிராப்ட்ஸ்மன். முகம்மது ஹனீப்தான் தலைமைக் கொத்தனார்.

மஹால் கட்ட வெள்ளைச் சலவைக்கல் ஜெய்ப்பூரிலிருந்து வந்தது. பேத்பூர் சிக்ரியிலிருந்து லக்ஷத்துப் பதினாயிரம் வண்டி சிவப்புக்கல் வேறு வந்திருக்கிறது. ஒரு சதுர கெஜம் நாற்பது ரூபாய் விலையுள்ள மஞ்சள் சலவைக்கல் வந்தது நர்மதை நதிக்கரையிலிருந்து. தூய வெள்ளைப் பளிங்கு கற்கள் சைனாவிலிருந்து வந்தன. அதன் விலையெல்லாம் கொஞ்சமாய் ஒரு சதுர கெஜத்திற்கு ஐந்நூற்று எழுபது ரூபாய் மட்டுந்தான். பல சொல்வானேன் இலங்கையிலிருந்து