பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

153

ஏந்து புயத்து இராவணனார்
    காதலும் அச்சூர்ப்பனகை
           இழந்த மூக்கும்
வேந்தர் பிரான் தயரதனார்
     பணியினால் வெங்காளில்
          விரதம் பூண்டு
போந்ததுவும் கடைமுறையே
     புரந்தானார் பெருந்தவமாய்
          போயிற்று அம்மா

என்று தானே புலம்ப வருகிறது கம்பனுக்கு. காவிய இலக்கணத்திற்குக் கொஞ்சமும் மாறுபடா வகையில் எழுந்த இலக்கியமே கம்பனுடைய இராமகாதை. இக்காவியம் என்னும்படி காவியத்தில் பல அவயவங்களையும் பிரதான சம்பவமாகிய ராவண வதத்தோடு இணைத்து இணைத்து மொத்தத்தில் பார்க்கும்போது ஏகம் என்ற உணர்ச்சியை உண்டாக்கி விடுகின்றான் அவன்.

இன்னும் ஓர் அதிசயம். நாம் வாழும் உலகில் இன்னும் எத்தனை எத்தனையோ கோளங்கள் எல்லாம் இப்பேரண்டத்தில் சூரியனைச் சுற்றிச் சுற்றி ஓடுவதையே பார்க்கிறோம். அண்டங்கள் எல்லாம் உய்ய அருளும் ஆதவனை நடுநாயகமாக வைத்து அவனைச் சுற்றி ஓடுவதிலேதானே இறைவனது திருவிளையாடல்களை நாம் அறிகிறோம். எல்லா உலகும் ஒரே தலைவனிடத்திலிருந்து தோன்றுவதும் அவனிடத்திலே சென்று ஒன்றுவதும் தான் இயல்பு என்னும் பெரிய தத்துவத்தையல்லவா விளக்குகிறது, இச்சூரிய மண்டல விவகாரம் (Solar System). இது போலவே ராமனை நடுநாயகமாக வைத்து காவியத்தில் வரும் மற்ற பாத்திரங்கள் எல்லாம் நடமாடுகின்றன. பெற்ற தந்தையும் தாயும் உடன் பிறந்த சோதரரும் கட்டிய மனைவியும் அவனிடத்தில் இடையறா அன்பு பூண்டு அவனை விட்டு அகலாது அன்பு