பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

155


பல்லவ சிற்பிகளின் பெரிய வீச்சையும் சாளுக்கிய சிற்பிகளின் சிற்றுளி வேலையையும், மொகலாயர்காலத்துச் சின்னஞ் சிறு சித்திரம் வரைபவர்களின் கலை நயத்தையும் ஒருங்கே ஞாபகத்துக்குக் கொண்டுவரக்கூடியதாக இருக்கிறது.

இனி இக்காவியமாளிகைக்குள்ளேயே நுழைந்து பார்த்தால் வேறு ஒரு காவியத்திலும் இத்துணை வேறுபட்ட அருங்குணங்கள் இந்த அளவுக்கு அகப்படாது என்றுதான் தோன்றுகிறது. கம்பனே,

அழகெல்லாம் ஒருங்கே கண்டால்
     யாவரே ஆற்றவல்லார்

என்று அவனுடைய சிருஷ்டியான சீதைக்குக் கொடுக்கும் வர்ணனை அவனுடைய காவியத்துக்கும் பெரிதும் பொருந்தும் என்கிறார் வ.வே.சு. ஐயர்.

காவிய மாளிகையின் கவிதா மண்டபத்தின் அழகையே அனுபவிப்பதா. சித்திரச் சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் சித்திரங்களையே கண்கொள்ளாமல் பார்த்துக் கொண்டே நிற்பதா அல்லது நாடக அரங்கத்திலே வரும் நடிகர்களின் நடிப்பிலே மயங்குவதா என்று தான் தெரியவில்லை. எப்பக்கம் திரும்பினாலும் மாளிகையின் அழகுகள் நம்மை அப்படி அப்படியே வசீகரித்து விடுகின்றன. மாளிகை எப்படி இருக்கிறது என்று விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் அதற்கும் கம்பனது உதவியைத்தான் நாம் நாட வேண்டியிருக்கிறது. லங்கா நகரத்திலுள்ள மாளிகைகளை வர்ணிக்கும் கம்பன்

பொன் கொண்டு இழைத்த
     மணியைக் கொடு பொதிந்த
மின் கொண்டமைத்த
     வெயிலைக் கொடு சமைத்த