பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158

கம்பன் சுயசரிதம்


இது எல்லாம் சரிதான். நாடகத்திற்கும் சினிமாவிற்கும் செய்முறைகளில் கையாளும் உத்திகளில் (Technique) எவ்வளவோ வேறுபாடு உண்டோ? உதாரணமாக ஒரு காவிய நாயகன் உள்ளத்தில் பழைய நினைவுகள் எழுகிறது என்றால் எழுத்தில் அதைச் சொல்லிவிடலாம். அரங்க மேடையில் அந்த நினைவுகளை கண்ணுக்குத் தோன்றும் வகையில் காட்ட முடியாதே. சினிமாவில் என்றால் திரைச்சீலையில் கதாநாயகன் தலையை மட்டும் பெரிதாகக் காட்டி அவன் மண்டையில் ஓடும் எண்ணங்களை எல்லாம் காட்சி வடிவில் காட்டி காண்பவர்களுக்கு விளக்கி விடுதல் கூடுமே. இப்படி Play back பண்ணுவது எல்லாம் சினிமாவில் கையாளும் உத்தியாக அமைவது காரணமாக எந்த விஷயத்தையும் எவ்வித கோணத்திலும் காட்டி மக்களை மகிழ்விக்க முடியுமே. இன்னும் பல காட்சிகளை எட்ட இருந்தும் காட்டலாம். அருகில் நெருங்கி முக பாவங்களை உணரும் வகையிலும் காட்டலாம். இவைகளைத் தானே Long distance short, close up என்றெல்லாம் சினிமாக் கலைஞர்கள் குறிப்பிடுகிறார்கள். இது எல்லாம் நாடகத்தில் சாத்தியமாக இராதே என்பர் சிலர்.

ஆனால் இத்தனையையும் இதற்கு மேல் உள்ளதையும் காவியங்களில் காட்ட முடியும் என்கிறேன் நான். இது தமிழ் நாடகக் காட்சிகள் எல்லாவற்றிலும் காண முடிகிறதோ இல்லையோ கவிச்சக்கரவர்த்தி கம்பன் எழுதிய ராமாயணத்தில் அவன் திறமையாகக் காட்டியிருக்கிறான். அந்தக் காட்சி அண்மைக் காட்சி என்னும் Long distance shot, close up என்னும் சினிமாக் கலையின் திறனுள்ள செயல்முறையை அவன் எவ்வாறு காட்ட முயன்று வெற்றி பெற்றிருக்கிறான் என்பதற்கு ஒரே ஒரு உதாரணம் மட்டும் சொன்னால் போதும். கிஷ்கிந்தையில் ருஷ்ய முகபர்வதத்தில் வாலிக்கு அஞ்சிய சுக்ரீவன் மறைந்திருந்து வாழ்கிறான். அங்கு துணைவியாம் சீதையை இழந்த ராமனும் அவன் தம்பி இலக்குவனும்