பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

15


பெருகும் பொருநை நாட்டைத்தான். பொருநை நாடு என்றால் அங்குள்ள பொதிகைமலை, அம்மலை வீழ் அருவிகள், அம்மலையிடை வாழ்ந்த அகத்தியர் எல்லாம் என்கண் முன்னாலே வருகிறார்கள். ஞாபகத்தில் வைத்துக்கொள். நான் பிறந்த நாட்டிலே மலையே கிடையாது. அப்படிப்பட்டவன்

ஓங்குமரன் ஓங்கி, மலை இங்கி, கழை ஓங்கி
பூங்குலை குலாவும் குளிர்சோலை புடைவிம்ம
தூங்குதிரை ஆறுதவழ்

சூழல்களையும் குன்றுகளையும் பாடி இருக்கிறேன் என்றால் உங்கள் நாட்டிற்கும் வந்திருக்கிறேன் என்று தெரிந்து கொள்வாய் அல்லவா! எங்கள் நாட்டில் நடந்து கிடந்த நதிகள் எல்லாம் அந்தப் பொதிகை மலையிலே அருவியாக நிமிர்ந்து நிற்பதைக் கண்டு அதிசயித்திருக்கிறேன். இம்மட்டோ, தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவனை தழற் புரைசுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தவனை, என்றுமுள தென்தமிழ் இயம்பி இசை கொண்டவனை வாயாரப்பாடி மகிழ்ந்திருக்கிறேன். அவன் வளர்த்த அந்த சங்கத்தினை

“தென்தமிழ் நாட்டு அகன் பொதியில்
திருமுனிவன் தமிழ்ச்சங்கம் சேர்கிற்றிரேல்
என்றும் அவன் உறைவிடமாம்”

என்று மனமாரப் பாராட்டியிருக்கிறேன். அதன் மூலம் என் வணக்கத்தை அந்தத் தமிழ் முனிவனுக்குச் செலுத்தியிருக்கிறேன்.

நான் – (இடைமறித்து) சரிதான். நீங்கள் எதைத்தான் நன்றாகப் பாடவில்லை. கோதாவரியையும் தான் அழகாகப் பாடியிருக்கிறீர்கள்.

கம்பன் – தம்பி உள்ளதைச் சொல்கிறேன். நான் அங்கெல்லாம் போனதே இல்லை. போயிருந்தால் கோதாவரியை வர்ணிக்க சான்றோர் கவியை உவமானமாக