பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

178

கம்பன் சுயசரிதம்


அப்போது,

எல்லாரும் எல்லாப்
     பெருஞ்செல்வ மெய்திடலால்
இல்லாரும் உடையாரும்
     இல்லாத கோசலத்தை
ராமனெனும் லக்ஷியத்தை
     இலக்குவனின் சேவகத்தை,
கோமான் தசரதனின்
     கொற்றமுடைச் சத்தியத்தை,
தள்ளரிய நீதியெனும்
     தனியாறு புகமண்டும்
பள்ளமெனும் தகைசிறந்த
     பரதன் அவன் பண்பை.
கங்கை நதியினிலே
     கனிந்த உளத்தோடு
வங்கமதை யோட்டும்
     வள்ளல் குகன் அன்பை,
வாலியெனும் வானரனின்
     வளமிகுந்த வீரமதை,
சிவநிறை வீடணனின்
     சித்தத் தெளிவதனை,
ஆழிசூழ் இலங்கையிலே
     அசோக வனத்திடையே
சிலைபோல் சிறையிருந்த

     செல்வியவள் பொறையை,


இவையோடு,

இன்னும் இவைபோன்று
     எடுத்தனையோ நித்திலங்கள்
கம்பனெனும் கடலிருந்து

     கைப்பற்றிக் கொண்டேன் யான்.